பிரபல நடிகை ரம்பா முதலமைச்சர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். ‘உள்ளத்தை அள்ளித்தா’ உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் ரம்பா. தற்போது கலைஞர் தொலைக் காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார்.
இன்று காலை நடிகை ரம்பா திடீரென்று கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்றார். அவருடைய சந்திப்புக்கு காரணம் எதுவும் தெரியவில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.
செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்
திமுகவுக்காக எஸ்.வி.சேகர் பிரச்சாரம்
சென்னை,மார்ச் 30: பிராமண சமுதாயத்திற்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி எஸ்.வி.சேகர் மனு ஒன்றை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார். இதை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலமைச்சர் அவரிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
பிராமண சமுதாய மக்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வரிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார். லட்சக்கணக்கான பிராமணர்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு அவசியம் என்று எஸ்.வி.சேகர் கூறினார். இதனை கனிவுடன் கவனிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாக பின்னர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும். திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். எம்எல்ஏ பதவி ராஜினாமா குறித்து ஏப்ரல் மாதத்தில் தமது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்
Monday, March 30, 2009
கருணாநிதி - ரம்பா - எஸ்.வி.சேகர்
Labels:
எஸ்.வி.சேகர்,
கருணாநிதி,
ரம்பா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment