Wednesday, February 20, 2008

ஜெ. 60 ஒரு பார்வை

இன்று மாசி மகம். ஜெ. தனது 60ஆவது பிறந்தநாள், சஷ்டியப்தபூர்த்தி (எ) மணிவிழாவை திருக்கடையூர் அபிராமி அம்மன் - அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ருத்ர ஏகாதசி, ஹோமங்கள், அபிஷேகங்களுடன் கொண்டாடுவதாக செய்தி. வாழ்த்துக்கள்..!



படம்: நன்றி: தினமலர்

பொதுவாக சஷ்டியப்தபூர்த்தி (எ) மணிவிழா என்பது கணவன் - மனைவி - தம்பதியினர்தானே கொண்டாடுவார்கள். திருமணம் செய்துகொள்ளாத ஆணோ, பெண்ணோ இந்த மாதிரி செய்துகொண்டு பார்த்ததில்லை. இது என்ன புது மாதிரி மாலை மாற்றல் என புரியவில்லை. இது மாதிரி நீங்கள் எங்காவது பார்த்திருந்தால் தெரியப்படுத்தவும்.

{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

இனிமேலாவது ஜெ. என்ன செய்யவேண்டும் (எமது wish list)

* உ.பி.ச மற்றும் சுற்றத்தினரை கட்சியிலோ (ஆட்சியில் இருந்தால் அரசிலோ தலையிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

* நல்ல இரண்டாம் கட்டத்தலைவர்களை தயார் செய்யவேண்டும். அவர்களுக்கு வாய் திறந்து பேசவும் கருத்துகளைச் சொல்லவும் உரிமை கொடுக்கவேண்டும்

* 'தான்' என்ற நிலையிலிருந்து முடிவு எடுக்காமல் மற்ற தோழமை மற்றும் கூட்டணி கட்சிகளை, தலைவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும்

* தனக்குக் குடும்பமோ, வாரிசுகளோ இல்லையென்ற (அறியப்பட்ட) நிலையில் சொத்து சேர்த்தோ, கமிஷன் வாங்கியோ கட்சிக்கும்/அரசுக்கும் கெட்ட பெயர் சேர்க்கும் ஆட்களை தூர விலக்கவேண்டும்

* யாரோ கொடுத்த அறிக்கைகளை தினமும் விடுக்காமல், பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும், தொழிலதிபர்களையும், தலைவர்களையும் தினமும் சந்தித்து மக்கள் தொடர்பில் நல்ல பெயர் எடுக்கவேண்டும்.

* கோபத்தைக் கட்டுப்படுத்தி தனக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்கியே தீருவது போன்ற நிலைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்

* தமிழ்நாட்டுக்கு மிகவும் சிறந்தவகையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தியது
மாதிரி அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு நதீநீர்ப் பங்கீட்டில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும்.

* அடிக்கடி ஹைதராபாத், சிறுதாவூர், கோடநாடு என எஸ்ஸாக இருக்காமல் தனது இருப்பை மக்களுக்காக மாற்றவேண்டும்.

இதெல்லாம் நடக்குமா, தமிழகத்தில் சாத்தியமா ? இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு
ஜெ.வின் பீமரத சாந்தியில் 70ஆவது பிறந்தநாளில் தெரியும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


செய்தி: நன்றி: மாலைச்சுடர் 20-02-2008

சிறப்பு பூஜை


நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் காலசம்ஹார மூர்த்தி, பாலாம்பிகையுடன் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். இங்கு சிவபெருமான் மார்கண்டேயருக்கு சிரஞ்சீவி வரம் கொடுத்ததாக ஐதீகம்.

60 வயது துவங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் ஆயுள் ஹோமம் செய்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

ஜெயலலிதா, மக நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் நட்சத்திரப்படி நாளை அவரது பிறந்தநாள் விழா இதையொட்டி, சஷ்டியப்த பூர்த்திக் கான சிறப்பு பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கடையூர் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த குருக்கள் தான் பூஜை செய்வது வழக்கம். வேறு குருக்கள் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்காக மன்னார்குடியைச் சேர்ந்த கணேச குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் இந்த பூஜையை மேற்கொள்கிறார்கள்.

இன்றிரவு ருத்ராபிஷேகத்துடன் பூஜை தொடங்குகிறது. பின்னர் காலசம்ஹார மூர்த்தி அபிஷேகம் நடைபெறுகிறது. சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் ஹோமம், முதல் கால பூஜை இன்றிரவு நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

பின்னர் மக நட்சத்திரம் நாளை துவங்கும் போது, 2வது கால பூஜையில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். ஜெயலலிதா தங்குவதற்காக பிள்ளை பெருமாள் நல்லூர் விருந்தினர் மாளிகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

1 comment:

TBCD said...

நிசமாவே புரியல்ல. தயவு செய்து "விலக்கவும்".