Monday, January 12, 2009

சொன்னது நடந்தது..! : மு.க.அழகிரி

40 ஆயிரம் வித்தியாசம் சொன்னது நடந்தது மு.க.அழகிரி பேட்டி

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், வாக்கு எண்ணிக்கை நடந்த மருத்துவக்கல்லூரிக்கு மு.க.அழகிரி வந்தார். அவரை ஏராளமான தொண்டர்கள் வரவேற்று, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.



அழகிரியிடம் வேட்பாளர் லதா அதியமான் ஆசி பெற்றார். பின்னர், அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக அரசின் சாதனைகளுக்காகவும், ஏழைகளுக்காக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காகவும் திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. வெற்றிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள், தோழமைக்கட்சி தலைவர்கள், அயராது உழைத்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரசாரத்தின் போது, என்மீது அவதூறு பரப்பிய வைகோ மீது நான் ஏற்கனவே கூறியபடி வழக்கு தொடருவேன். ஜெயலலிதா உட்பட எதிர்க்கட்சியினர் என்மீது கூறிய அவதூறு பிரசாரங்களை மக்கள் நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசின் சாதனைகள் அதிகரித்து வருவதால், இதுவரை நடந்த 3 இடைத்தேர்தல்களிலும் வாக்கு வித்தியாசமும் அதிகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதை விட சிறப்பான வெற்றிபெறும் வகையில், 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுவோம். இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

செய்தி: படங்கள்: நன்றி: Dinakaran





சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்து இலங்கை பிரச்னை பற்றி பேசினர்.




திருமங்கலத்து யானை: கருணாநிதி கவிதை


உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார்& உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறு கண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் ஈட்டி &
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும் &குறை
பல சொல்லிப் பேசும் கும்பலை & வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் & உன்னால்
பழிதீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஓறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!

1 comment:

"உழவன்" "Uzhavan" said...

என்னக் கொடுமை சார்..

தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்