Friday, July 13, 2007

ஆரிய மாயையை வீழ்த்துக - கருணாநிதி

திமுகவை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பது நாம் சமீப காலமாக கண்டு வரும் நிதர்சனமாகும். திமுக இப்போதும் வலிமையான இயக்கமாக உள்ளது. மேலும் இதை வலிமை மிக்க இயக்கமாக ஆக்கி விட்டு தான் நான் கண்மூடுவேன்.

250 மதிமுகவினர் இணைந்தனர்.
திமுகவை வலுப்படுத்திய பிறகே கண்ணை மூடுவேன். கருணாநிதி உருக்கம்


சென்னை, ஜூலை 12:


Nandri: Photo source: Dinamalar


திமுகவை மேலும் வலிமை மிக்க இயக்கமாக ஆக்கி விட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று முதலமைச்சர் கருணாநிதி உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பது நாம் கண்டு வரும் நிதர்சனம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அண்ணா அறிவாலய வளாகத்தில் மதிமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் சபாபதி மோகன் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களுமாக 250க்கும் மேற்பட்டவர்கள் இன்று கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று கருணாநிதி பேசியதாவது: சபாபதி மோகன் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் மதிமுகவிலிருந்து விலகி இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சபாபதி மோகனின் இந்த முடிவு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். என்னை பொறுத்தவரை இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது இயற்கையாகவே நடைபெற்றதாகும். அவர் எப்போதுமே திமுகவின் அடிப்படை கொள்கையை விட்டு விலகியதில்லை. இங்கிருந்து சில காலம் விலகிச் சென்ற மதுரை பி.எஸ்.மணியன், திராவிட இயக்க கொள்கை, லட்சியம் மாறாமல் இங்கு வந்து இணைந்திருக்கிறார்.

திமுகவை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பது நாம் சமீப காலமாக கண்டு வரும் நிதர்சனமாகும். திமுக இப்போதும் வலிமையான இயக்கமாக உள்ளது. மேலும் இதை வலிமை மிக்க இயக்கமாக ஆக்கி விட்டு தான் நான் கண்மூடுவேன்.

வருங்காலத்தில் திமுக இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் அரசியல் நிலைப்பாட்டை நிர்ண யிக்கும் மாபெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்பது தான் என் வாழ்நாள் ஆசை. இதை என் வாழ்நாளில் நிறைவேற்றுவேன்.

தமிழகத்திலுள்ள திராவிட கட்சிகள் பொது பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை போல ஒன்றிணைந்து செயல்பட நான் விரும்பினேன். ஆனால் ஒரு ஆரிய சக்தி, திராவிட சக்தி என்ற பெயரிலே அதற்கு தடையாக இருந்தது உங்களுக்கு தெரியும்.

இது போன்ற ஆரிய மாயைகளை விரட்ட வேண்டும் என்று தான் பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் பாடுபட்டார்கள். அந்த ஆரிய மாயையை வீழ்த்துவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Nandri: Source: Maalaisudar

No comments: