Friday, June 8, 2007

தமிழனைப் பற்றி கருணாநிதி கவிதை

அதிமுகவினர் தனது உருவ பொம்மைகளை எரித்து நடத்திய போராட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். பதுமைகளைக் கொளுத்தி பரவசம் காண்பது பண்பாடா ?

முதல்வரின் கவிதை

தமிழன் என்று நெஞ்சு நிமிர்த்துகிறாய்-
தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளத் தடையேதுமில்லை.

தமிழர்க்கு நான் தலைவனோ இல்லையை தமிழ்க் குலத்தின்
தலைக்கோடியில் இல்லாவிடினும் கடைக்கோடித் தமிழ்த் தொண்டன் நான்

எதிர்வரிசைத் தலைவியென்னை ஏற்றிப் போற்றிப் பாட வேண்டும்; என
என்றுமே நான் கேட்கவில்லை-

என் பிறந்த நாளுக்குக் கூட வாழ்த்து அவரிடம் எதிர்பார்க்கவில்லை-
நன் மொழி கூறாவிடினும்-

எரியீட்டி பாய்ச்சுதல் போல
எழுத்தெல்லாம் விஷமாக்கி அர்ச்சனை தேவைதானா

இட்லர் என்றும் கம்சன் என்றும் துரியன் என்றும்
எத்தனை வித வசைமாரி உண்டோ அத்தனையும் பொழிந்து விட்டு

அது எதிர் விளைவாய் எகிறி வரும்போது மட்டும்
ஒரு எரிமலையாய் பொங்கி சதித் திட்டம் வகுத்து

எதுவும் அறியாத் தொண்டர்களை ஏவியே விட்டு-என்னுருவப்
பதுமைகளைக் கொளுத்தி விட்டுப் பரவசம் காண்பதுதான் பண்பாடா

அந்தப் பண்பாட்டைப் பாராட்டி மகிழ்வதற்கும்
பழம் பகையை என் மீது உமிழ்வதற்கும்

பரபரப்பாய் ஒரு தமிழன் பாய்கின்றான்; அந்தோ
விறுவிறுப்பாய் வீசுகின்றான் கத்தியை முதுகில்-

அய்யகோ; அவனுந்தான் தன்னைத் தமிழன் என மெய்யாகச் சொல்லிக் கொள்கிறானா

அல்லால் நெஞ்சறிந்து பொய்யாகக் கூறித் திரிகின்றானா


Nandri: Thatstamil

அப்படியே இதையும் படிங்க

அதிமுகவை போல திமுக அராஜக வன்முறையில் ஈடுபட்டதில்லை- அன்பழகன்

No comments: