Wednesday, July 22, 2009

சட்டமன்றத்தின் 'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகர் - கருணாநிதி

'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகர்..கருணாநிதி:

எஸ்.வி.சேகர் (அதிருப்தி அதிமுக): 2006ம் ஆண்டு ஆடி அமாவாசை அன்று நான் பேசினேன். அதற்கு பிறகு உங்களுடைய கருணையால் இப்போது பேச வாய்ப்பு கிடைத்துள்ளது, நன்றி. இறந்துபோன என்னுடைய தந்தையின் நினைவு நாளான இன்று பேசவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் நான் பேசியபோது, மயானத்தில் பணியாற்றும் வெட்டியான்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதை பத்தே நாட்களில் செய்து கொடுத்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

சமூகநீதி மாநிலமாக இருக்கும் தமிழகத்திலே, சமூகநீதி காவலராக இருக்கும் முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறேன். ஆளும் கட்சிக்காரர்கள்தான் தன்னை பாராட்டக்கூடாது என்று முதல்வர் சொன்னார். நான் பாராட்டுவதில் தவறில்லை. இதர பிரிவினர் நலவாரியம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தால் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

முதல்வர் கருணாநிதி: நம்முடைய சட்டமன்றத்தின் 'வாஞ்சிநாதன்' எஸ்.வி.சேகருடைய முறையீடும் கவனிக்கப்படும், பரிசீலிக்கப்படும்.




சென்னை அருகே சோளிங்கநல்லூரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் எம்எல்ஏக்களுக்கு அரசு விலையில் இரண்டரை கிரவுண்ட் நிலம் வழங்கப்படவுள்ளது.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:

திமுக எம்எல்ஏ பெரியண்ணன்: கடையேழு வள்ளல்களிலே முதல்வராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தின் தலைவரும், தமிழகத்தின் பொற்கால ஆட்சியில் கதாநாயகனாக இருக்கும் தலைவருடைய ஆட்சியில் தனி ஒரு மனிதர் யாரும் பலனடையாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. பெண்ணாகரம் ஒன்றியம் நாகரசம்பட்டி கிராமத்திலே பட்டாசு தொழிற்சாலையில் தீப்பற்றி ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவருக்கு உதவி அளிக்கப்படுமா?

முதல்வர் கருணாநிதி: ஏதே ஒரு விபத்திலே இறந்துவிட்ட செய்தியை சொல்வதற்கும், அவர்களுக்கு நிதி கிடைக்குமா என்று கேட்பதற்கும் இவ்வளவு நேரம் என்னைப் புகழ வேண்டிய அவசியமில்லை. நான் திமுக எம்எல்ஏக்கள், தோழமை கட்சி எம்எல்ஏக்களுக்கு சொல்லிக் கொள்வது, உங்களுக்கு பேச கொடுக்கப்படும் நேரமே குறைவு, அதிலே எங்களைப் புகழ்வதற்கு ஒரு பகுதியை எடுத்துக்கொண்டால் யாருக்கும் பயன் இல்லை.

`இந்திரனே, சந்திரனே' என்று புகழ்ந்து பேசுவதால் காரியம் ஒன்றும் நடந்து விடாது. தயவு செய்து என்னையோ, அமைச்சர்களையோ நீங்கள் புகழ்வதை தவிர்க்க முடியா சந்தர்ப்பம் வந்தால் மட்டும் பயன்படுத்துங்கள். எப்போதும், கேள்வி கேட்கும் நேரத்தில் கூட, `உலகப் புகழ் பெற்ற தமிழர்களுடைய தலைவராக இருக்கின்ற கலைஞர் அவர்களே' என்று எங்களை புகழ்ந்து, எங்கள் ஊரில் பாலம் கட்டப்படுமா? என்று கேட்பதில் அர்த்தமில்லை என்றார்.

எம்எல்ஏக்களுக்கு வீட்டுமனை:

ஞானசேகரன் (காங்கிரஸ்): சோளிங்கநல்லூரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் எம்எல்ஏக்கள் யார் யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு அரசு நிர்ணயிக்கின்ற நியாயமான விலைக்கு இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வழங்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: நீங்கள் குறிப்பிடுகின்ற இடத்தில் நீங்கள் ஒருவர் மாத்திரம் வீடு கட்டிப் பயன் எதுவும் இல்லை. ஒரு நூறு சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களையாவது பெற்று என்னிடம் தந்தால், அந்த நூறு பேருக்கான வசதி மிக்க வீடுகளை அமைப்பதற்கு போதுமான இடம் உங்களுக்கு வழங்கப்படும்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- ஞானசேகரன் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் மாநிலத்தின் நிதி முழுவதும் எம்எல்ஏக்களுக்கே தேவைப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட வேண்டாம். எம்எல்ஏக்களுக்கு எல்லாம் வீடு இருக்கிறது. முதல்வர் அத்தியாவசிய தேவைகளை புரிந்து நிறைவேற்றி, அதிகபட்ச தேவைகளை நிராகரிக்க வேண்டும் என்றார்.

30 நிமிடத்தில் 105 எம்எல்ஏக்கள் கையெழுத்து:

100 பேரிடமாவது கையெழுத்து வாங்கி வாருங்கள் என்று முதல்வர் சொல்லி முடித்த 30 நிமிடத்தில், மின்னல் வேகத்தில் 105 எம்எல்ஏக்கள் இது தொடர்பான மனுவில் கையெழுத்து போட்டு அதை ஞானசேகரனிடம் தந்துவிட்டனர்.

ஆனால், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதில் கையெழுத்து போடவில்லை.

இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு நிலம் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Tuesday, July 21, 2009

எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி விருந்து

சட்டசபைக் கூட்டத் தொடர் நிறைவு பெறுவதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றோடு நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.

42 வகை உணவுப் பதார்த்தங்கள் இதில் இடம் பெற்றனவாம்.

முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறைச் செயலாளர் மாலதி, ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டி.ஜி.பி. கே.பி.ஜெயின், தீயணைப்புத் துறை இயக்குனர் டி.ஜி.பி. நட்ராஜ், உளவுப் பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தி.மு.க. வக்கீல் ஜோதி உட்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.

எஸ்.வி.சேகரும் சாப்பிட்டார்...

அதிமுகவின் புரட்சி எம்.எல்.ஏ.வான எஸ்.வி.சேகரும் இந்த விருந்துபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டார்.

அதேசமயம், வழக்கம் போல அதிமுக, பாமக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, June 17, 2009

ஸ்டாலினுக்கு தங்கப் பதக்கம் - ராமநாதபுரம் குடிநீர் திட்டம்

குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்த ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கம் அணிவித்தார் கருணாநிதி


சென்னை, ஜூன் 17: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்ததற்காக, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை முதல்வர் கருணாநிதி பாராட்டி தங்கப் பதக்கம் அணிவித்தார். சான்றிதழும் வழங்கினார்.



அதைத் தொடர்ந்து துணை முதல்வரின் செயலர் தீனபந்து, குடிநீர் வழங்கல் செயலர் நிரஞ்சன் மார்டி, குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ஸ்வரண் சிங் ஆகியோருக்கும் முதல்வர் கருணாநிதி பாராட்டு சான்றிதழும், பதக்கமும் அணிவித்தார்.

இத்திட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 220 பேருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீர் உப்புத்தன்மை உடையது. இங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. முதல்வர் கருணாநிதி, மக்களின் குறையை அறிந்து பிரச்னையை முழுவதுமாக நீக்குவதற்கு 30-01-07 அன்று அடிக்கல் நாட்டினார். கடந்த 11ம் தேதி திட்டத்தை தொடங்கியும் வைத்து விட்டார்.

திருச்சி காவிரி ஆற்றுப் பகுதியை நீர் ஆதாரமாக கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சில பகுதியிலும் உள்ள மக்கள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.

இத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர், இந்த திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு பதில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றினால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பரிசளிப்பதாக அறிவித்தார். அதேபோல விரைவாக முடிக்க செயல்பட்டவர்களுக்காக இன்று முதல்வர் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி உள்ளார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

Monday, June 15, 2009

காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு தர முடிவு ?

தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக திமுகவில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப் படும் என்றும் இலாகாக்கள் மாற்றப் படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு, அது தற்போது வலுவடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் கூடி விவாதிப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழ்நாடு காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

தமிழக அரசில் பங்கு கேட்க காங்கிரஸ் மேலிடமும் தற்போது விரும்புவதாகவும், அதுபற்றி ஆலோசனை நடத்தி திமுக தலைமைக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசில் 7 அமைச்சர்களை பெற்றுள்ள திமுகவும், காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் பங்கு கொடுக்க முடிவு செய்து தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெறும் திமுக அரசில் காங்கிரசும் பங்கு பெற்றால், அரசு மட்டுமல்லாமல் கூட்டணியும் வலுவடையும் என்றும், இதனைக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.

திமுக அரசுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய சில எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரசை அரசில் சேர்க்கும் போது திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர் களின் பதவிகளும் பறிக்கப்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள முதலமைச்சர், அந்த அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்களின் இலாகாப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கோ.சி. மணி, பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படு வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக கோ.சி. மணி அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பொங்கலூர் பழனிச் சாமியின் செயல்பாடுகள் அவரது சொந்த மாவட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் தோல்வி அடைய நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரதுபதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.

அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் செய்தி விளம்பரத் துறை சரியாக செயல்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதற்கு பொறுப்பான பரிதி இளம்வழுதி மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கா. ராமச்சந்திரனின் செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சியினர் மத்தி யிலும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில அமைச்சர் களின் தலைகளும் உருளலாம் எனத் தெரிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கூட்டத் தொடர் முடிந்ததும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

Thursday, June 11, 2009

சென்னை மெட்ரோ: 2014-2015

சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து ரயில் ஓடத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் மக்கள் நெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தரைக்கு அடியில் செல்லும் வகையில், டெல்லியில் உள்ளதுபோல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்தின்படி, இரண்டு பாதைகளில் மெட்ரோ ரயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திட்டப் பணிகள் தொடக்க விழா, கோயம்பேட்டில் நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொடி அசைத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும். இதில் 59 சதவீதத்தை ஜப்பான் வழங்கும். இதற்கான ஒப்பந்தம் 21-11-2008ல் டோக்கியோவில் கையெழுத்தானது. மத்திய அரசு 20 சதவீதம் வழங்கும்.

இந்த திட்டப்படி 2 வழித்தடங்கள் அமையும்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ. நீளம் அமையும். வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை, 20 அடி ஆழ சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும்.

2ம் வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக புனித தோமையர் மலையை அடையும். இதன் நீளம் 22 கி.மீ. அண்ணா நகர் வரை சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும். திட்ட ஆலோசகர்களாக இந்தியா, பிரான்ஸ், ஹாங்காங், ஜப்பான் நிபுணர்கள் இருப்பார்கள்.

கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.199.20 கோடியில் நடைபெறும். இந்த பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது. நூறு அடி சாலையின் மத்தியில் இதற்கான தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடியும்.

திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

மெட்ரோ ரயில் பாதை





Chenai Metro Website

Monday, May 25, 2009

டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் - உச்ச நீதி மன்றம்

கடைசியில் நீதி இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது என்ற நம்பிக்கை தரும் தீர்ப்பு.

இதற்காக பாடுபட்ட பல்வேறு மீடியா நண்பர்களுக்கும், தனி நபர்களுக்கும் நன்றி.

நன்றி: Rediff

Links:

http://news.rediff.com/report/2009/may/25/supreme-court-grants-bail-to-binayak-sen.htm

The Supreme Court on Monday granted bail to civil rights activist Dr Binayak Sen, who has been lodged in jail for the last 22 months on charges of aiding and abetting naxalite activities in Chhattisgarh.

A bench comprising Justices Markandey Katju and Deepak Verma took up the matter on Monday after senior advocate Shanti Bhushan, on May 22, mentioned Sen's petition in which a notice was issued to the Chhattisgarh government.

When the notice was issued, the apex court had asked the state government to provide medical aid to Sen, who has been suffering from heart ailment.

Sen, who has been in custody since May 14, 2007, contended that there was no evidence against him to be booked under the Unlawful Activities (Prevention) Act, 1967.

The Chhattisgarh government accused Sen, who is the vice-president of the People's Union of Civil Liberties, of acting as a courier for an alleged naxalite who is in jail.

He also sought bail on medical grounds, saying he had been suffering from a heart ailment and needed treatment at the Christian Medical College, Vellore in Tamil Nadu.

Sen, a doctor by profession, claimed that the chargesheet against him had already been filed and that he had remained in jail during the investigation of the case registered against him.


http://www.rediff.com/news/2008/may/16guest1.htm

Dr Sen, a paediatrician by training, was arrested on May 14 2007 by the Chhattisgarh police under the dreaded Chhattisgarh Special Public Security Act and Unlawful Activities Prevention Act, which are in many ways more draconian than the now repealed Prevention of Terrorist Activities Act.

The police claimed it had evidence to prove that Dr Sen was actively helping out Maoists by providing them logistic support. The only piece of evidence they have been able to show till date is the fact that he made 33 visits to Narayan Sanyal, an old, ailing Maoist leader in jail. They were perfectly legal visits and allowed under the jail manual, not something clandestine. Sanyal was suffering from many diseases and required regular medical support.

As a civil right activist and doctor it was not unusual for Dr Sen to come into contact with extremist Maoists, especially since he was in Chhattisgarh, which is reeling under the bloody conflict between the state and the Maoists.

His plea for bail in the Supreme Court was rejected, which did not find it necessary to verify the claims by the state counsel. It agreed with the state that a free Binayak was a threat to the national security in Chhattisgarh.

The state is a dangerous place for civil right activists. It is the most recent destination for rich capitalists eyeing its mineral rich land and want it to be made available. How do you do it unless the tribals are driven out of their lands?

Sunday, May 17, 2009

என்.டி.டிவி - ஹிண்டு - என்.ராம் - பிரணாய் ராய் - பாய் பாய்

தேர்தல் முடிவுகளைத் தொலைகாட்சியில் காணும் பரபரப்பில் எத்தனை பேர் இதனை கவனித்திருப்பீர்கள் என தெரியவில்லை. பட்டு வேட்டு பட்டு சட்டையில் (வேஷம் போடும்) என்.ராம் மற்றும் பிரணாய் ராய் படம் போட்ட ஹிண்டுவின் கடைசி பக்க விளம்பரத்தை பலரும் தவற விட்டிருக்கக்கூடும்.

ஜெனிஃபர் அருளின் தலைமையில் சென்னையை மையமாகக் கொண்டு இந்த கூட்டுத் தயாரிப்பு தொடங்குகிறது. வெற்றிக்குப் பிறகு தயாநிதி மாறனை பிரணாய் ராயும் பர்கா தத்தும் பேட்டி எடுத்த போது மாறன் என்.ராமை நன்றாக வெளுத்து வாங்கினார் (திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என சொன்னதற்கு.










ஜெயாடிவியில் காலையிலிருந்தே சுரத்தில்லாமல் தொகுத்து வழங்கிய மாலன் மற்றும் ரபி பெர்நார்ட். திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது போலும். அட்லீஸ்ட் 12 மணி வரையாவது ஒப்பேத்தினார்களே.









மேலும் சில டிவிக்களின் தொகுப்பாளர் படங்கள். எந்தக் கட்சி (இந்திய அளவில்) ஆட்சிக்கு வந்தாலும் ஒரு வித உற்சாகத்தோடு பணியாற்றும் டெல்லி (ஆங்கில) சேனல் தொகுப்பாளர்களுக்கும் தமிழக திமுக / அதிமுக டிவிக்களின் தொகுப்பாளர்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு !









படங்கள் கைபேசியில் எடுக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஆங்கில சேனல்கள் பல்வேறு முடிவுகளை இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் அளவு தங்கள் பலத்தையும் அரசியல் பெரும்புள்ளிகளுடன் நட்பையும் கொண்டுள்ளன. தமிழகத்தில் தான் ஆட்டோ கலாச்சாரமெல்லாம்.

தொங்கு பாராளுமன்றம் வந்தால் 10 நாட்களுக்கு இல்லை அதற்கும் மேல் தங்களின் பிரெகிங் நியூஸ் விஷயங்களை வைத்து விளம்பரங்களை அள்ளலாம் என்றிருந்த டெல்லி சேனல்களுக்கு இந்த தீர்ப்பால் கொஞ்சம் சோர்வுதான்.