Monday, July 7, 2008

மக்கள் கஷ்டப்படும்போது பொழுதுபோக்கு முக்கியமா ? : ஜெயலலிதா

‘‘மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே கருணாநிதிக்கு சிந்தனை இருப்பதால், அவர் திரைத்துறைக்கே சென்றுவிடலாம்’’ என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் தங்கள் வாழ்க்கையில்சந்தித்துக்கொண்டிருக்கின்ற ‘நிதிச்சுமைகள்’, ‘வெட்டுகள்’, ‘தட்டுப்பாடுகள்’, ‘பற்றாக்குறைகள்’, ‘துன்பங்கள்’ ஏராளம்! ஏராளம்! இதுபோன்ற கரடுமுரடான பாதைகள் தமிழக மக்கள் சந்தித்ததேயில்லை.

மின்சாரத்துறை அமைச்சரா? அல்லது மின்வெட்டுத்துறை அமைச்சரா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு தன் துறையை நிர்வகித்து வருகிறார் ஆற்காடு வீராசாமி. ‘‘பிறந்த நாள் போன்றவற்றை சாக்கிட்டு கருணாநிதியை தொந்தரவு செய்வதை தவிர்த்தால், மக்கள்நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும்‘‘ என்று திமுக தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால், என்ன நடந்தது? நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 1ம் தேதியன்று ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு யார் யாரை அழைப்பது என்ற சிந்தனையில் மூன்று நாட்கள் முதல்வர் ஈடுபட்டிருந்தது தற்போது அம்பலமாகிவிட்டது. கடைசியாக, 150 பேரை அந்த சிறப்புக் காட்சிக்கு அழைத்திருக்கிறார். பத்திரிகைகளும் இந்த விழா குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், அன்றைய தினம் தமிழகத்தின் நிலைமை என்ன? இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகமே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்துக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லும் வாகனங்களும் வரவில்லை. எரிபொருள் நிரப்புவதற்காக பெரும்பாலானோர் அங்கும் இங்கும் அலைந்து சென்னையை வலம் வந்து கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் இதே அவல நிலைதான் காணப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் தமது திரைப்படத்தை கண்டுகளித்திருக்கிறார் கருணாநிதி. மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற செயலை கண்டிக்கிறேன்.

நான் முதலமைச்சராக இருந்தபோது மியூசிக் அகாடமியின் 79வது வருடாந்திர மாநாடு மற்றும் சங்கீத நிகழ்ச்சியை துவக்கி வைக்குமாறு என்னை கேட்டார்கள். நானும் துவக்கி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். ஆனால், வங்காள விரிகுடாவிற்கு தென்கிழக்கே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பெருமழையினால் மக்கள் வேதனையில் இருக்கும்போது நாம் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது நன்றாக இருக்காது என்று நினைத்தேன். சூழ்நிலையை விளக்கி, மேற்படி நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்து, மியூசிக் அகாடமிக்கு கடிதம் அனுப்பினேன். இதுதான் கருணாநிதிக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம்.

ஆக மொத்தம் தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. வாழ வழியில்லை. விண்ணை முட்டும் விலைவாசி மக்களை துரத்துகிறது. வறுமை வாட்டுகிறது. ‘‘ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’’ என்ற வசனத்திற்கு ஏற்ப, மக்களை வாழ்க்கையின் ஓரத்திற்கு துரத்திக்கொண்டிருக்கிறார். திரைப்படம், நாடகம், ஆட்டம், பாட்டம் போன்ற பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளிலேயே அவரது சிந்தனை இருப்பதால், அவர் திரைத்துறைக்கே சென்றுவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தினகரன் 8 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Sunday, July 6, 2008

சிரஞ்சீவி தாத்தாவானார்

ரஜினி தாத்தாவிற்குப் பிறகு இன்னொரு தென்னிந்திய சூப்பர் (மெகா) ஸ்டாரும் தாத்தாவாகிவிட்டார்.

* * * * *

புதுக்கட்சி துவங்கும் முன், நடிகர் சிரஞ்சீவி தாத்தாவானார்.கடந்த ஆண்டு ஐதராபாத் நகரைச் சேர்ந்த கிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, பெண் குழந்தைக்கு தாயானார். பிரசவத்திற்காக நேற்று முன்தினம் செகந்திராபாத் தாராபூர்வாலா நர்சிங் ஹோ மில் ஸ்ரீஜா அனுமதிக்கப்பட்டார்.


தகவல் அறிந்ததும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, மகன் ராம்சரண் தேஜா, தாய் மாமன் அல்லு அரவிந்த், பரத்வாஜின் பெற் றோர், மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். சிசேரி யன் ஆபரேஷனுக்கு பின் பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த செய்தி பரவியதும் மருத்துவமனை முன், சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து சிரஞ்சீவி குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

செய்தி: நன்றி: தினமலர்

Thursday, July 3, 2008

கடவுள் ஏற்கும் வகையில் சேவை: கருணாநிதி

"ஏழைகளுக்கு உதவி செய்து, கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

"இந்தியாவின் திருத்தூதர் புனித தோமையார்' என்ற திரைப்பட துவக்க விழா, சென்னை சாந்தோம் புனித தோமையார் சர்ச்சில் நேற்று நடந்தது. தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை வரவேற்றார். சென்னை, மயிலை உயர் மறை மாவட்டத்தின் பிஷப் சின்னப்பா தலைமை வகித்தார். துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் முன்னிலை வகித்தார்.



படத்தைத் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எங்கள் ஆட்சிக்கு சிறுபான்மை ஆட்சி என்ற பெயரும் உண்டு. சிறுபான்மை சமுதாயத்தை சீர்தூக்கி விட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆட்சி நடக்கிறது. உலகத்தில் மூன்று கல்லறைகளில் பெருந்தகையாளர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரோமில் ராயப்பர், ஸ்பெயினில் யாகப்பர், தமிழகத்தில் தோமையார். இவர்களில் தோமைய்யரை அய்யர் என அன்போடு அழைக்கின்றனர். அய்யர் என்று அழைக்கும் போது ஏதோ ஒரு பிரிவினரை அழைப்பதாக கருதக் கூடாது. உயர்ந்தோர், சிறந்தோர் என்ற பொருளில் தான் அழைக்கப்படுகிறது. சிறந்த ஒருவரை பாராட்டும் சொல்.

லாரன்ஸ் பயஸ் பேசும் போது, "கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதியை ஏன் அழைக்க வேண்டும்?' என்று சிலர் கேட்டதாக கூறினார். கருணாநிதி சாதாரணமானவர். கடவுள் ஆயிரம், லட்சம், கோடி மடங்கு பெரியவர். கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா, இல்லையா? என்பது பிரச்னை அல்ல. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்..



ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும். நோயுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நலிந்தோருக்கு நன்மை செய்ய வேண்டும். உதவி கேட்ட ஏழையை விரட்டினால், கடவுளை கும்பிடும் கைகளை கடவுளே மன்னிக்க மாட்டார். கடவுளுடன் அன்புவழி பயிற்சி; கருணை வழி பயிற்சி இருக்க வேண்டும். தோமையார், தான் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம், அவர் ஆற்றிய தொண்டு என்னை கவர்ந்தது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், புனித தோமையார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். எர்னஸ்ட் பால் நன்றி கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

Tuesday, July 1, 2008

‘குசேலன்’ கேசட் வெளியீட்டு விழா பசுபதி, நயன்தாரா, மீனா புறக்கணிப்பு



சென்னையில் நடந்த 'குசேலன்' பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'குசேலன்’. இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, தயாரிப்பாளர்கள் பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் உட்பட யாருமே பசுபதி பற்றியோ மீனா, நயன்தாரா பற்றியோ பேசவே இல்லை. Ôவிளம்பரங்களில் தங்களை புறக்கணித்ததால் அவர்கள் விழாவை புறக்கணித்திருப்பதாகÕ கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.

'குசேலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பசுபதி வேடத்தில் நடித்திருப்பவர் ஜெகபதி பாபு. அவரை விழா மேடையில் அமர வைத்து, கவுரவித்தனர். அவரது வேடத்தை தமிழில் ஏற்ற பசுபதியை கண்டுகொள்ளாதது ஏன் என புரியவில்லை என விழாவுக்கு வந்திருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விழாவுக்கு வராதது குறித்து பசுபதியிடம் கேட்டபோது, 'வெடிகுண்டு முருகேசன்' படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடக்கிறது. அதனால் விழாவுக்கு வரமுடியவில்லை என்றார். இதே போன்று 'ஏகன்' பட ஷூட்டிங் காரணமாக நயன்தாரா வரவில்லை என அவரது தரப்பினர் கூறினர். மீனா ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் வரவில்லை என்று கூறப்பட்டது.

விழாவுக்கு வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் வடிவேலு உட்பட பலர் பிசியானவர்கள்தான். அவர்களும் பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி விழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான பசுபதி, நயன்தாரா, மீனா வராதது சினிமா வட்டாரத¢தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 2 ஜூலை 2008 (சென்னை பதிப்பு)

Monday, June 23, 2008

1 செ.மீ சிறுத்த ஆனந்த விகடன்

இது வரை 17 செ.மீ x 13 செ.மீ யாக வெளிவந்த ஆனந்த விகடன் அதே 10 ரூபாய்க்கு கடந்த 2 வாரமாக 17 செமி x 12 செமி யாக வருகிறது. இதை எத்தனை பேர் கவனித்தனரோ.

பிஸ்கட், டூத்பேஸ்ட், டீ பொடி முதலிய பண்டங்கள் 100கிராம் இருந்தது 85 அல்லது 90 கிராம் (விலையும் அதிகம் ஆனால் அதே 100 கிராம் பாக்கிங்கில் 85 கிராம்) என்பது போல விகடனும் தனது வேலையைக் காட்டிவிட்டது.

நியூஸ் பிரிண்ட் விலை ஏறிவிட்டதுதான். இல்லையென்று சொல்லவில்லை. இத்தனை வருடங்களாக விலையை ஏற்றி அதை அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் அதுபோல் செய்யாமல் சொல்லாமல் கொள்ளாமல் சுமார் 17 x 1 செ.மி அளவு காகிதக் குறைப்பு என்பது நேர்மையாகத் தெரியவில்லை.

சமீபத்தில் குங்குமத்தில் வெளியான கட்டுரைப்படி

Sunday, June 22, 2008

விஜய் கொடி + சன் டிடிஎச்



நடிகர் விஜய் பிறந்தநாள் விழா, நற்பணி மன்ற கொடி அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய். அருகில் நடிகை நயன்தாரா.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x



x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

மதுரையில் மட்டும் சன் டிடிஎச் (அல்லது டாடா ஸ்கை, டிஷ் டிவி) எவ்வளவு விற்கும் ?



செய்தி: படங்கள்: தினகரன் 23 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

Friday, June 20, 2008

மன்னிப்பு கேட்க மாட்டோம்- ராமதாஸ்

குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ மாட்டோம், அது தேவையற்றது என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இன்று நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

தனிப்பட்ட ஒரு பிரச்சினையை பொதுப் பிரச்சனையாக்கி அதற்கும் பாமகவையே பொறுப்பாக்கிவிட வேண்டும் என்ற திமுக திட்டத்தின் வெளிப்பாடுதான் இப்போது எழுந்துள்ள நிலைக்குக் காரணம். இந்த நிலைக்கு நானோ, பாமகவோ பொறுப்பல்ல.

வன்னியர் சங்க கல்விக் கோயிலை திறந்து வைத்ததே முதல்வர் கலைஞர்தான். ஆனால் அவருடைய மூத்த அமைச்சர் அதை பொறம்போக்கு என்கிறார். இதை நாங்கள் வேண்டுமானால் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளலாம். மாவீரன் குரு போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா...

குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக மன்னிப்பு கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ தேவையற்றது. அதை நாங்கள் செய்ய மாட்டோம்.

எங்களைப் பார்த்து வன்முறைக் கட்சி என்றும் சதி செய்கிறார்கள் என்றும் கலைஞர் குற்றம் சுமத்துகிறார்.

கலைஞரே, மனசாட்சியுடன் பேசுங்கள். வரலாற்றை மறந்து விடாதீர்கள். உங்கள் மீது உங்கள் கட்சிக்காரர்களைவிட அதிகம் மதிப்பு வைத்தவர்கள் நாங்கள். எங்களது கட்சியின் மாநாட்டுக்கு உங்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, மாநாட்டுப் பந்தல் முழுக்க பார்க்குமிடங்களிலெல்லாம் உங்கள் படங்களையும் சுவரொட்டிகளையும் வைத்தவர்கள்.

அப்போது நீங்கள் ஆற்காட்டாரைப் பார்த்து, உங்களால் கூட இப்படி மாநாடு நடத்த முடியாதே என்று கூறிப் பெருமைப்பட்டீர்கள். நாங்களா வன்முறையாளர்கள்? சரித்திரத்தை மறந்துவிடாதீர்கள்.


1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு மதுரைக்கு வந்த இந்திரா காந்தி அம்மையாரை பயங்கர ஆயுதங்களுடன் துரத்தித் துரத்தி கொல்ல முயன்றது யார்... திமுக அல்லவா... அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறைந்து மறைந்தல்லவா சென்னைக்கு வர வேண்டியிருந்தது. நீங்கள் எங்களைப் பார்த்து வன்முறையாளர்கள் என்பது நியாயமா...?

பாமக பதவிக்கு ஆசைப்படும் கட்சியல்ல. மானமும் கொள்கையும்தான் எங்களுக்குப் பெரிது. சில பத்திரிகையாளர்கள் எங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்றும், பதவிக்காக அணி மாறுபவர்கள் என்றும் எழுதுகிறார்கள்.

ஏன், திமுக அணி மாறியதே இல்லையா. பதவிக்கு சண்டை போட்டதில்லையா?. அப்படியா நாங்கள் நடந்து கொண்டோம். மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவியைப் பிடிக்க திமுக என்னவெல்லாம் செய்தது? நாங்கள் அப்படியா நடந்து கொண்டோம்?

நண்பர்களே... பாமக அமைதி விரும்பி. வன்முறைக்கு எதிரான கட்சி. இந்த மண்ணிலே ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்று அறவழியில் குரல் கொடுக்கும் அமைதி இயக்கம். அந்தக் கட்சியைப் பார்த்து கலைஞர் இப்படியெல்லாம் நெருப்பு வார்த்தைகளை அள்ளிக் கொட்டியது யார் செய்த சதி என்று புரியவில்லை.

இனி பாமகவின் பாதை புதிது. இந்தக் கூட்டணி உறவு முறிந்ததும், அடுத்து எடுக்கப்போகும் முடிவு குறித்தும் நீங்கள் என் முடிவுக்கு விட்டு விடுவதாகச் சொன்னீர்கள். ஆனால் நான் அதை உங்கள் முடிவுக்கே விட்டுவிட்டேன். அதுதான் பொதுக்குழு தீர்மானமாக வந்திருக்கிறது.

இனி பாமக வெற்றிப் பாதையில் வெற்றி நடைபோடும் என்றார்.

தீர்மான விவரம்:

முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

பாமக மீது மலிவான காரணங்களைக் கூறி கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக செயல்பட்டுள்ளது. இந்த உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் பாமகவை நீக்கியிருப்பது, திமுகவின் தன்னிச்சையான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

மன்னிப்பு கேட்கமாட்டேன்:

முன்னதாக, கூட்டணி முறிவுக்குக் காரணமானவரான காடுவெட்டி குரு பேசுகையில், நாங்கள் கட்சியின் சார்பில் நடத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதை ஒட்டுக் கேட்டதே பெரும் தவறு. தனிப்பட்ட கூட்டம் அது. கூட்டணிக் கூட்டணமோ அல்லது பொதுக் கூட்டமோ அல்ல.

அதில் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். அதையெல்லாம் இவர்கள் ஒட்டுக் கேட்பதா. இதற்காக நாங்கள்தான் நியாயமாக கோபித்துக் கொள்ள வேண்டும். எங்கள் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குத் தொடுத்து வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் குரு.

Nandri: Thatstamil

-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx-xxx

எந்த நிமிடமும் ராஜினாமா செய்ய தயார்-அன்புமணி

சென்னை: எங்களுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால் இழப்பு எங்களுக்கல்ல, திமுகவுக்குத்தான். அய்யா (டாக்டர் ராமதாஸ்) உத்தரவிட்டால் எந்த நிமிடத்திலும் எங்கள் பதவியை ராஜினாமா செய்ய நானும் அமைச்சர் வேலுவும் தயாராக உள்ளோம் என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

பாமகவுக்கோ அதன் நிறுவனரான அய்யாவுக்கோ பதவியோ புகழோ பெரிதல்ல. கொண்ட கொள்கைதான் முக்கியம். அய்யாவை தேடி வந்த பதவிகள் ஏராளம். அனால் அவர் எதையுமே விரும்பியதில்லை.

நாம் எல்லோருமே எப்போதுமே போராளிகளாக களத்தில் நிற்பவர்கள். பதவி நமக்கு ஒரு சுமைதான்.

மணல் கொள்ளை, கல்விக் கொள்ளை, மதுக் கடைகள் மூலம் பாட்டாளி மக்களிடம் அரசு அடிக்கும் கொள்ளை, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் பெயரில் விவசாயிகளிடம் அடிக்கும் கொள்ளை என பலவற்றை எதிர்த்து தொடர்ந்து களத்தில் போராடுபவர்கள் நாம்.

நம்மைப் போன்ற கொள்கைவாதிகளின் கூட்டணியை முறித்துக் கொண்டதால் இழப்பு நமக்கல்ல, திமுகவுக்குத்தான்.

எனக்கு பதவி முக்கியமல்ல. இந்தப் பதவியை எனக்குத் தரும்போதே அய்யா சொன்னார்: ஒரு வருடம்தான் பார்ப்பேன், நீ சரியாக செயல்படாவிட்டால் வேறு யாருக்காவது இதைக் கொடுத்துவிடுவேன் என்று.

அய்யா சொன்னால் அடுத்த நொடியே நானும் வேலுவும் பதவி விலகத் தயார் என்றார் அன்புமணி.