
இன்றைய படம் - புத்தம் புதிய காப்பி
நன்றி: தினகரன் (24-09-2007)
Monday, September 24, 2007
Thursday, September 20, 2007
'......' ஒரு குடிகாரர்: '......' - சி.என்.என் ஐபிஎன்
மொதல்ல விஜயகாந்தப் பத்தி சொன்னார் - அப்புறம் அம்மாவ ஜாடையா சொன்னார். இப்போ இவரப்பத்தி. மத்தவங்களை குடிகாரர் என சொல்லுவதில் அப்படியென்ன ஆனந்தமோ ?
செய்தி சுட்டி: CNN-IBN
Sunday, September 16, 2007
இரண்டு கட்சியினரும் திருடர்கள் - விஜயகாந்த்
லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி ஏன்? விஜயகாந்த் அறிவிப்பு
தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர தயக்கமாகவுள்ளது, என்று விஜயகாந்த் பேசினார்.
திருவண்ணாமலை மற்றும் வடசென்னை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க.,வில் இணைந்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் இவ்விழா நேற்று நடந்தது.
அப்போது தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:
அரசியல் கட்சி நடத்துவதற்கு நிறைய தகுதிகள் வேண்டும். அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என பலமுறை யோசித்து தான் நான் கட்சி துவக்கினேன். கட்சியை துவங்குவது சுலபம்; அதை நடத்துவது தான் கடினம். நான் பெண்களை பற்றி அதிகம் பேசுவதாக கூறுகின்றனர். கட்சித் துவங்கியது முதல் எனக்கு பல சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள்தான் எனக்கு அதிகம் ஆறுதல் கூறுகின்றனர். அதனால்தான் அவர்களை பற்றி நான் உயர்வாக பேசுகிறேன்.
நான் பொய் சொல்லமாட்டேன் என்பதை நம்பித்தான் இன்றைக்கு இளைஞர்கள் என் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். நான் நினைத்தால் குடிசையில் இயங்கும் கட்சி அலுவலகத்திற்கு வராமல் சூஏசி' ரூமிலேயே இருந்திருக்க முடியும். என்னை நம்பியுள்ள மக்களுக்காக நான் என்றும் அவர்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். அவர்களுக்காக நான் மழையில் நனையவும், வெயிலில் காயவும் தயாராக இருக்கிறேன். தி.மு.க., கூட்டணி கட்சியினர் மணல் கொள்ளையில் ஆதாரம் இருப்பதாகவும், கல்லுாரி சீட் விவகாரத்தில் ஆதாரம் இருப்பதாகவும் கூறுவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.
ஜாதி, மத உணர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் மக்களோடு மக்களாக என்னால் பழக முடிகிறது. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அரசு கேபிள் சூடிவி' ஆரம்பிக்கப்படுகிறது. அதில்வரும் விளம்பர வருமானத்தை அரசு எடுத்துகொண்டு கேபிள் சூடிவி' இணைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பொழுது போக்கு அம்சம் மக்களுக்கு தேவை என்பதால், இலவச கலர் சூடிவி' வழங்கப்படுகிறது என்று கூறியவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். விருத்தாசலம் தொகுதியில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தது தவறு என்று ஒருவர் வசைப்பாடி கொண்டிருக்கிறார். எரியும் அடுப்புக்கு பக்கத்தில் கூட தூங்கலாம்; ஆனால், பசி இருந்தால் தூங்க முடியாது.
பசியின் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் ஏழை, நடுத்தர மக்கள் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையை தயாரித்தேன். அதில் உள்ள சில திட்டங்களை மாற்றி அரசு இன்று தங்கள் கண்டுபிடிப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முடிய வேண்டிய கத்திப்பாரா மேம்பாலப்பணி இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. மேம்பாலத்தின் வயது 25 ஆண்டுகள் என்று கூறுவார்கள். அதில் ஏழு ஆண்டுகள் கட்டுமானப்பணி முடிவதற்குள் கழிந்து விடும்போல் இருக்கிறது. தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர தயக்கமாகவுள்ளது. மத்திய அரசை அவர்கள் ஆளாவிட்டாலும் அமைச்சர்களை வைத்து கொண்டு கோடிகளை சுருட்டுகின்றனர். இதை தடுக்கத்தான் பார்லிமென்ட் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அறிவித்துள்ளேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Source: Nandri: Dinamalar
Wednesday, September 12, 2007
சுனாமி எச்சரிக்கை - இந்தோனேசிய பூகம்பம்
சுனாமி எச்சரிக்கை - இந்தோனேசிய பூகம்பம்
இந்தோனேசியாவில் இன்று மாலை இந்திய நேரப்படி 4.40க்கு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தினால் (ரிக்டர் அளவு 7.9) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதி நாடு வாழ் மக்களுக்குத் தெரிவிக்கவும்.
Powerful earthquake hits Indonesia, tsunami warning issued
Jakarta, Sept. 12 (AP): A powerful earthquake hit Indonesia today, causing buildings to sway strongly in the capital, and authorities issued a tsunami warning for much of the Indian Ocean region.
The US Geological Survey said the quake had a preliminary magnitude of 7.9 and hit at about 6:10 p.m. (1640 IST). It was centered about 15.6 kilometers underground in the southern Sumatra area, it said.
The Pacific Tsunami Warning Center issued a tsunami warning for wide areas of the region.
"Earthquakes of this size have the potential to generate a widespread destructive tsunami that can affect coastlines across the entire Indian Ocean Basin," it said.
In Jakarta, tall buildings swayed for several minutes, and occupants rushed down the stairs to escape.
Source: http://www.hindu.com/thehindu/holnus/000200709121712.htm
http://earthquake.usgs.gov/eqcenter/recenteqsww/Quakes/quakes_all.php
MAP 7.9 2007/09/12 11:10:26 -4.517 101.382 30.0 SOUTHERN SUMATRA, INDONESIA
Tuesday, September 11, 2007
தி.மு.க., கூட்டணியிலிருந்து டி.ராஜேந்தர் விலகல்
தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகல் : டி.ராஜேந்தர் அதிரடி
சென்னை : தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகுவதாக லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று அவர் கூறியதாவது : தி.மு.க., கூட்டணி தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
source: Nandri: Dinamalar
Monday, September 10, 2007
கருணாநிதி அதிரடி ? மாமல்லபுரத்தில் ஆலோசனை
6 மந்திரிகளின் இலாகாக்களில் மாற்றம் ?? கருணாநிதி அதிரடி - மாமல்லபுரத்தில் ரகசிய ஆலோசனை
தமிழக அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, என்.கே.கே.பி.ராஜா, கே.பி.பி.சாமி உட்பட 6 அமைச்சர்களின் இலாகாக்களை அதிரடியாக மாற்ற முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து இன்று மாமல்ல புரத்தில் அவர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை 2006 மே 13ந் தேதி பதவியேற்றது. 30 மந்திரிகள் உள்ளனர். இதில் சில மந்திரிகளின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு திருப்திகரமாக இல்லையென்று கூறப்படுகிறது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருடைய இலாகாவை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பரிதி இளம்வழுதி, பெரிய கருப்பன், கே.பி.பி.சாமி, என்.கே.கே.பி.ராஜா ஆகிய அமைச்சர்களின் செயல் பாட்டில் முதலமைச்சருக்கு திருப்தி இல்லையென்று கூறப்படுகிறது. ஆகவே அவர்களின் இலாகாவையும் மாற்ற முதலமைச்சர் திட்ட மிட்டிருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அவர் இன்று காலை மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருடன் அமைச்சர் பொன்முடி சென்றதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் தனியாக புறப்பட்டுச் சென்று முதல்வருடன் ஆலோசனை யில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்திகரமாக செயல்படாத அமைச்சர்களின் இலாகாவை மாற்றுவது தொடர்பாகவும், ஒரு சிலரை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சபாநாயகர் ஆவுடையப்பனை அமைச்சராக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை அமைச்சராக ஆக்கினால் துணை சபாநாயகராக இருக்கும் வி.பி.துரைசாமியை சபாநாயகராக பதவி உயர்த்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.
இது குறித்து விரைவில் முடிவெடுத்து முதல்வர் அமைச் சரவையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் திமுக அரசுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுத்து வரும் நெருக்கடி குறித்தும் அதை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சேலம் ரெயில்வே கோட்ட திறப்பு விழா, அண்ணா பிறந்தநாள் விழா, கலைஞர் தொலைக்காட்சி துவக்க விழா ஆகியவை குறித்தும் முதல்வர் கருணாநிதி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Source: Nandri: Maalaisudar
Sunday, September 9, 2007
சாய்பாபா - ஸ்டாலின், துரைமுருகன் சந்திப்பு
புட்டபர்த்தி சென்று சத்ய சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சென்னையில் கூவம் நதியை சுத்தப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்பு அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Photo courtesy: Dinamalar
உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்றனர். இவர்களுடன், அகில இந்திய சத்ய சாய் சேவா சங்கத் தலைவரும், "டிவிஎஸ்' நிர்வாக இயக்குனருமான வேணு சீனிவாசன், தொழிலதிபர் சேதுராம சீனிவாசன் ஆகியோரும் சென்றனர். புட்டபர்த்தியில் இரவு தங்கிய ஸ்டாலின், நேற்று காலை எழுந்ததும் அங்கு, "வாக்கிங்' சென்றார். பின்னர், சாய் அறக்கட்டளை நடத்தி வரும் பிரமாண்டமான மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், திருமண மண்டபம், நுõலகம் போன்றவற்றை சுற்றிப் பார்த்தார். இதன்பின், சத்ய சாய்பாபாவை அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, ஏற்கனவே சாய்பாபா அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருஷ்ணா நீர் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து ஸ்டாலின் விவரித்தார். தற்போது, பூண்டி வரை கால்வாய் சீரமைப்புப் பணிகள் நடந்து வருவது குறித்தும் பாபாவுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு சாய்பாபா வந்திருந்த போது, கூவம் நதியை சுத்தப்படுத்தும் பணியை சாய் அறக்கட்டளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு உதவுவதாக சாய்பாபாவும் உறுதியளித்திருந்தார். இதை சாய்பாபாவிடம் நினைவுபடுத்திய ஸ்டாலின், கூவம் நதியை சுத்தப்படுத்துவதோடு இருபுறமும் கான்கீரிட் தடுப்பு அமைத்துத் தர உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான வரைவு திட்டத்தையும் சாய்பாபாவிடம் ஸ்டாலின் கொடுத்ததாக தெரிகிறது. பூண்டி வரையிலான கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும், நடைபெற இருக்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என சாய்பாபாவிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். இருபது நிமிடங்களுக்கு மேல் நடந்த இச்சந்திப்பு முடிந்ததும், புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னை திரும்பினார்.
Source: Nandri: Dinamalar