Sunday, September 9, 2007

சாய்பாபா - ஸ்டாலின், துரைமுருகன் சந்திப்பு

புட்டபர்த்தி சென்று சத்ய சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சென்னையில் கூவம் நதியை சுத்தப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்பு அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.


Photo courtesy: Dinamalar

உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்றனர். இவர்களுடன், அகில இந்திய சத்ய சாய் சேவா சங்கத் தலைவரும், "டிவிஎஸ்' நிர்வாக இயக்குனருமான வேணு சீனிவாசன், தொழிலதிபர் சேதுராம சீனிவாசன் ஆகியோரும் சென்றனர். புட்டபர்த்தியில் இரவு தங்கிய ஸ்டாலின், நேற்று காலை எழுந்ததும் அங்கு, "வாக்கிங்' சென்றார். பின்னர், சாய் அறக்கட்டளை நடத்தி வரும் பிரமாண்டமான மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், திருமண மண்டபம், நுõலகம் போன்றவற்றை சுற்றிப் பார்த்தார். இதன்பின், சத்ய சாய்பாபாவை அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, ஏற்கனவே சாய்பாபா அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருஷ்ணா நீர் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து ஸ்டாலின் விவரித்தார். தற்போது, பூண்டி வரை கால்வாய் சீரமைப்புப் பணிகள் நடந்து வருவது குறித்தும் பாபாவுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு சாய்பாபா வந்திருந்த போது, கூவம் நதியை சுத்தப்படுத்தும் பணியை சாய் அறக்கட்டளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு உதவுவதாக சாய்பாபாவும் உறுதியளித்திருந்தார். இதை சாய்பாபாவிடம் நினைவுபடுத்திய ஸ்டாலின், கூவம் நதியை சுத்தப்படுத்துவதோடு இருபுறமும் கான்கீரிட் தடுப்பு அமைத்துத் தர உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான வரைவு திட்டத்தையும் சாய்பாபாவிடம் ஸ்டாலின் கொடுத்ததாக தெரிகிறது. பூண்டி வரையிலான கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும், நடைபெற இருக்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என சாய்பாபாவிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். இருபது நிமிடங்களுக்கு மேல் நடந்த இச்சந்திப்பு முடிந்ததும், புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னை திரும்பினார்.


Source: Nandri: Dinamalar

4 comments:

மாசிலா said...

//புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னை திரும்பினார்.//
லேட்டா வந்தா பொண்டாட்டி கோவிச்சிக்குமோ!
;-)

ரவி said...

///. இவர்களுடன், அகில இந்திய சத்ய சாய் சேவா சங்கத் தலைவரும், "டிவிஎஸ்' நிர்வாக இயக்குனருமான வேணு சீனிவாசன், ///

பிரதர், இவருடைய பெயருக்கு முன்னால் அமரர் என்று போட்டுவிடுங்களேன்...போனவாரம் தான் சாயிபாபாவை வணங்கும்போது ஹார்ட் அட்டாக் ஏற்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்....

வடுவூர் குமார் said...

அரசாங்கத்திடம் பணம்/ஆள் பலம் இல்லையா?
எதற்கு பாபாவிடம் போகவேண்டும்?
நிஜமான சந்தேகம் மக்களே.. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.
எதிர்காலத்தில் இது ஒரு முன் உதாரணமாக போய்விடக்கூடாது என்ற ஆதங்கம் தான்.

Sambar Vadai said...

Ravi,

the person who died last/previous week was different. Not Venu Srinivasan of TVS. He was G.K.Raman - the former head of Sundaram Finance
http://www.dinamalar.com/2007aug28/general_tn2.asp

BTB, this is Dinamalar news - not my own news :-)