Sunday, September 16, 2007

இரண்டு கட்சியினரும் திருடர்கள் - விஜயகாந்த்

லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி ஏன்? விஜயகாந்த் அறிவிப்பு
தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர தயக்கமாகவுள்ளது, என்று விஜயகாந்த் பேசினார்.

திருவண்ணாமலை மற்றும் வடசென்னை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க.,வில் இணைந்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் இவ்விழா நேற்று நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:

அரசியல் கட்சி நடத்துவதற்கு நிறைய தகுதிகள் வேண்டும். அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என பலமுறை யோசித்து தான் நான் கட்சி துவக்கினேன். கட்சியை துவங்குவது சுலபம்; அதை நடத்துவது தான் கடினம். நான் பெண்களை பற்றி அதிகம் பேசுவதாக கூறுகின்றனர். கட்சித் துவங்கியது முதல் எனக்கு பல சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள்தான் எனக்கு அதிகம் ஆறுதல் கூறுகின்றனர். அதனால்தான் அவர்களை பற்றி நான் உயர்வாக பேசுகிறேன்.

நான் பொய் சொல்லமாட்டேன் என்பதை நம்பித்தான் இன்றைக்கு இளைஞர்கள் என் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். நான் நினைத்தால் குடிசையில் இயங்கும் கட்சி அலுவலகத்திற்கு வராமல் சூஏசி' ரூமிலேயே இருந்திருக்க முடியும். என்னை நம்பியுள்ள மக்களுக்காக நான் என்றும் அவர்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். அவர்களுக்காக நான் மழையில் நனையவும், வெயிலில் காயவும் தயாராக இருக்கிறேன். தி.மு.க., கூட்டணி கட்சியினர் மணல் கொள்ளையில் ஆதாரம் இருப்பதாகவும், கல்லுாரி சீட் விவகாரத்தில் ஆதாரம் இருப்பதாகவும் கூறுவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.

ஜாதி, மத உணர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் மக்களோடு மக்களாக என்னால் பழக முடிகிறது. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அரசு கேபிள் சூடிவி' ஆரம்பிக்கப்படுகிறது. அதில்வரும் விளம்பர வருமானத்தை அரசு எடுத்துகொண்டு கேபிள் சூடிவி' இணைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பொழுது போக்கு அம்சம் மக்களுக்கு தேவை என்பதால், இலவச கலர் சூடிவி' வழங்கப்படுகிறது என்று கூறியவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். விருத்தாசலம் தொகுதியில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தது தவறு என்று ஒருவர் வசைப்பாடி கொண்டிருக்கிறார். எரியும் அடுப்புக்கு பக்கத்தில் கூட தூங்கலாம்; ஆனால், பசி இருந்தால் தூங்க முடியாது.

பசியின் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் ஏழை, நடுத்தர மக்கள் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையை தயாரித்தேன். அதில் உள்ள சில திட்டங்களை மாற்றி அரசு இன்று தங்கள் கண்டுபிடிப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முடிய வேண்டிய கத்திப்பாரா மேம்பாலப்பணி இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. மேம்பாலத்தின் வயது 25 ஆண்டுகள் என்று கூறுவார்கள். அதில் ஏழு ஆண்டுகள் கட்டுமானப்பணி முடிவதற்குள் கழிந்து விடும்போல் இருக்கிறது. தமிழகத்தை ஆண்டு அனுபவித்த இரண்டு கட்சியினரும் திருடர்கள் என்பதால் அவர்களுடன் கூட்டணி சேர தயக்கமாகவுள்ளது. மத்திய அரசை அவர்கள் ஆளாவிட்டாலும் அமைச்சர்களை வைத்து கொண்டு கோடிகளை சுருட்டுகின்றனர். இதை தடுக்கத்தான் பார்லிமென்ட் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அறிவித்துள்ளேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Source: Nandri: Dinamalar

No comments: