Tuesday, April 14, 2009

பா.ஜ.க வேட்பாளர்கள் - தென்சென்னை: இல.கணேசன்

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னையில் இல.கணேசனும், ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசரும் போட்டி.


தென்சென்னை இல.கணேசன்: தஞ்சாவூரில் பிறந்த இவர், அரசு பணியில் இருந்தார். அதை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றினார். 2002ல் இருந்து 2006 வரை கட்சியின் தேசிய செயலாளர், துணை செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார். மாநில தலைவராக உள்ளார்.

ராமநாதபுரம் திருநாவுக்கரசர்: எம்ஜிஆர் அமைச்சரவையில் இளம் வயதில் அமைச்சர் பதவி வகித்தவர். அதிமுகவில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை நடத்தினார். 2002ம் ஆண்டு பா.ஜ.வில் இணைந்தார். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றினார்.

கன்னியாகுமரி- பொன் ராதாகிருஷ்ணன்(57): நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வசிக்கிறார். பி.ஏ.,பி.எல். படித்துள்ளார். பா.ஜ. மாநில துணை தலைவர். மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


கோவை- ஜி.கே.எஸ் செல்வக்குமார்(47): கோவை கணபதியை சேர்ந்த இவர், பா.ஜ. மாநில செயலாளராக பதவி வகிக்கிறார். விவசாயம் மற்றும் சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். எம்.ஏ., எம்.பில்., படித்துள்ளார். மாநில ஜிம்னாஸ்டிக் சங்க தலைவராக பதவி வகிக்கிறார்.



நீலகிரி - குருமூர்த்தி (28): பி.காம்., டி.ஐ.எஸ்.எம். படித்துள்ளார். மாவட்ட பா.ஜ. இளைஞரணி தலைவர். ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் தேயிலை தூள் விற்பனை நிலையம் வைத்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் வசித்து வருகிறார்


ஈரோடு - என்.பி.பழனிச்சாமி (48): வழக்கறிஞர். ஈரோட்டை அடுத்த நசியனூர் மேற்குபுதூரை சேர்ந்தவர். பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளார். கொங்கு வேளாள கவுண்டர்.

பொள்ளாச்சி - வி.எஸ்.ரமேஷ் (44): பி.ஏ., படித்துள்ளார். விவசாயம் மற்றும் தனியார் பள்ளி தாளாளர். கொங்கு வேளாளர். சொந்த ஊர் ஆனைமலையை அடுத்த சேத்துமடை. பா.ஜ. மாவட்ட தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார்.

புதுச்சேரி - எம்.விஸ்வேஸ்வரன் (53): எம்.காம் படித்துள்ளர். புதுச்சேரி லாஸ்பேட்டை பிருந்தாவனத்தை சேர்ந்தவர். பாஜ மாநில தலைவராக உள்ளார். முதலியார். மாநில பொதுச் செயலாளர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.


வடசென்னை தமிழிசை சவுந்திரராஜன்:காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தனின் மகள். மருத்துவரான இவர் 1999 முதல் பா.ஜ.வில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் மருத்துவர். சிறந்த பேச்சாளர். மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.


கிருஷ்ணகிரி - ஜி. பாலகிருஷ்ணன்(53): ராயக்கோட்டை அருகில் உள்ள வீராதானூர். சிறு தொழிற்சாலை அதிபர். சிறுதொழிற்சாலை கூட்டமைப்பு சங்க முன்னாள் தலைவர், பா.ஜ. கட்சியில் மாவட்ட பொருளாளர்.



திருச்சி - லலிதா குமாரமங்கலம் (53): மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தங்கை. கடந்த தேர்தலில் புதுச்சேரியில் தோல்வியடைந்துள்ளார்.


வேலூர் - ஏ.கே. ராஜேந்திரன் (52) : பி.காம். படித்துள்ளார். பேக்கரி மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். தற்போது மாநில செயலாளர்.



பீட்டர் மாமா சொன்னது:


‘‘பி.ஜே.பி. வேட்பாளர் பட்டியல்ல, சிபிஆர் பெயரை காணோமே...’’ நண்பர் கேட்டார்.

‘‘அவருக்கும் மாநில தலைவருக்கும் இடையே நீண்ட நாளா இருந்துவந்த மோதல் காரணமா சீட் கொடுக்காம, கோவை மாவட்ட தலைவருக்கு சீட் கொடுத்திருக்காங்க... இல.கணேசன் முதல்முறையா தேர்தல்ல போட்டி போடுறார். அதைவிட எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார் ஆகியோருக்கும் சீட் இல்லை. அதை கவனிச்சீங்களா...’’

‘‘என்ன காரணம்னு நீயே சொல்லிடு பீட்டர்...’’

‘‘தேர்தல்ல கோடி கோடியா கொட்டினாலும் ஜெயிக்க முடியாது... எதுக்கு பணத்தை வீணாக்கணும்னுதான் அவங்க சீட் வேணாம்னு சொல்லிட்டாங்களாம்... கூட்டணி ஏதாவது செட்டாயிருந்தா, போட்டி போட்டு சீட் கேட்டிருப்பாங்க...’’ என்று பீட்டர் மாமா சொன்னார்.


செய்தி: நன்றி: தினகரன்

No comments: