Wednesday, December 17, 2008

எந்திரன் @ சன் டிவி

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் கூத்தாடிகளே ஒன்று பட்டால் ஊருக்குக் கொண்ட்டாட்டமா ? இல்லை திண்டாட்டமா ? இல்லை குடும்பத்திற்குக் கொண்டாட்டமா ?











படங்கள்: செய்தி: நன்றி:

தினகரன்
சென்னை பதிப்பு 18 டிசம்பர் 2008


ரஜினிகாந்த் & ஐஸ்வர்யா ராய் நடிக்கும் "எந்திரன்" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்


சென்னை, டிச.18: ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார்.

வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்ற உள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சண்டைகாட்சிகள் இதுவரை இந்திய திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்று சக்சேனா கூறினார்.

ரஜினிகாந்த், ஷங்கர், சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில் சக்சேனா இந்த தகவல்களை வெளியிட்டார்.

இதுபற்றி கலாநிதி மாறன் கூறுகையில், ‘‘சன் பிக்சர்ஸ்க்கு இது மிகப்பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் என்று உணர்வுபூர்வமாக நம்புகிறேன். ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும்’’ என்றார்.

இயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டி.வியுடன் சேரும்போது, பலத்த எதிர்பார்ப்புடன் விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும்’’ என்றார்.

ரஜினிகாந்த் கூறும்போது, ‘‘இது இந்தியாவின் மிகப்பெரிய படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

3 comments:

ஆதவன் said...

Hi please visit my website for thamizh short film.. and give your feedback.. if possible give a link to thamizhstudio.com in your block. like that..

tamil short film website:
www.thamizhstudio.com

thanks,
thamizhstudio.com

sorry for the inconvenience.

vinoth kumar said...

http://vinothkumarm.blogspot.com/2008/12/rajnis-endhiran-is-now-produced-by-sun.html
Here it comes some more news.. I think the budget must be exceeded into a rampage high...
Lets enjoy a mega treat at the end of 2009

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இதுபற்றி கலாநிதி மாறன் கூறுகையில், ‘‘சன் பிக்சர்ஸ்க்கு இது மிகப்பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் என்று உணர்வுபூர்வமாக நம்புகிறேன். ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும்’’ என்றார்.

இயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டி.வியுடன் சேரும்போது, பலத்த எதிர்பார்ப்புடன் விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும்’’ என்றார்.

ரஜினிகாந்த் கூறும்போது, ‘‘இது இந்தியாவின் மிகப்பெரிய படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.//

ஐயையோ; ஐயையோ...தொடங்கிராங்கடா...

கவுண்டர் பாணியில் படியுங்கள்..