Monday, March 24, 2008

தசாவதாரம - படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவன

கமல் 10 வேடங்களில் நடிக்கும் `தசாவதாரம்' படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவனின் அனல் பறக்கும் உரையும் இடம்பெறுகிறது


படம நன்றி: http://kamalhaasan.files.wordpress.com

கமல் பத்து வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படம் நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் காட்சிகளும் கமலின் வித்தியாசமான வேடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன.

பாடல் கேசட் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இவ் விழாவுக்கு நடிகர் ஜாக்கிஷானை அழைத்துள்ளனர். அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி உள்ளிட்ட இந்திய முன்னணி நடிகர்களும் பங்கேற்கிறார்கள். இதற்கிடையில் தசாவதாரம் படத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் தோன்றும் வகையில் சில காட்சிகளை சேர்க்க முயற்சி நடக்கிறது.

கமலின் பத்து வேடங்களில் ஒரு வேடம் விஞ்ஞானி. இக்கேரக்டரில் நடிக்கும் கமல் புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகம் செய்கிறார். இதற்காக அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் முன்னிலையில் பாராட்டு விழா நடப்பது போலவும் அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பங்கேற்பது போலவும் காட்சிகள் இணைக் கப்படுகின்றன.

ஜெயலலிதா ஒரு கமலுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது போன்ற காட்சியை இணைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இவற்றை எப்படி காட்சிகளாக எடுத்து சேர்க்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் அனல் பறக்கும் மேடைபேச்சும் இப்படத்தில் இடம்பெறுகிறது.

நன்றி: மாலைமலர்

No comments: