Thursday, October 11, 2007

அந்துமணியின் அப்பாவுக்கு விருது

அந்துமணி ரமேஷின் அப்பா - திரு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விருது பெற்ற விபரம் - இன்றைய தினமலரில் - படத்தில் இடமிருந்து மூன்றாம் இடத்தில்.

செய்தி-படம் / நன்றி: தினமலர்

அந்துமணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்க வேண்டாம். எல்லாம் சும்மா பதிவு விளம்பரம் தான் :-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பத்திரிகையாளர்களை பாராட்டுவதே இல்லை

சென்னை :"பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டுவதில்லை' என "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை புரோபஸ் கிளப் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் 35வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் புரோபஸ் சிறப்பு விருது, "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதினை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் வழங்கினார்.

கலை தம்பதியினர் மனோகர் மற்றும் மகிமாவுக்கும் புரோபஸ் சிறப்பு விருது வழங்கப்பட்டது. புரோபஸ் அங்கீகார விருது பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது."புரோபஸ் வே ஆப் சக்சஸ்புல் ஏஜிங்' நுõலினை வைத்தீஸ்வரன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பெற்றுக் கொண்டார். "புரோபஸ் வழங்கும் அருசுவை விருந்து' நுõலினை ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா உதவி பொதுமேலாளர் வசுதா சுந்தரராஜன் வெளியிட முதல் பிரதியை இன்னர் வீல்ஸ் கிளப்பின் துணை தலைவர் நந்தினி பெற்றுக் கொண்டார். விழாவில் 75 வயதான சென்னை புரோபஸ் கிளப் உறுப்பினர்களும், 50 வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த தம்பதிகளும் கவுரவிக்கப்பட்டனர். புரோபஸ் கிளப்பால் நடத்தப்பட்ட செஸ் போட்டி மற்றும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

என் வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத நாள். சென்னையில் கற்றவர்களும், பல துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கூடி ஒரு பரிசை வழங்குவது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், எனது சங்க கால நாணய ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது. அதே போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு நண்பர்களே கிடையாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களை கண்டால் வெறுப்பார்கள். அதனால் அவர்கள் வெறுப்பிற்கு ஆளாக வேண்டாம் என கருதி கூடுமானவரை ஒதுங்கியே இருப்பது வழக்கம்.பத்திரிகையாளர்கள் எவ்வளவு பணி செய்தாலும் இந்த சமுதாயம் அவர்களை பாராட்டாதது பெரிய குறை. ஒவ்வொரு பிரச்னையும் பத்திரிகையில் எழுதினால் தான் அதற்கு ஒரு முடிவு வருகிறது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என்றால், பத்திரிகையில் கலர் படத்துடன் செய்தி வெளியிட்டால் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது பத்திரிகையின் முக்கியமான பணி. இந்தப் பணியை வேறு யாரும் செய்வதில்லை. தினசரி இதுபோன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த பணிக்கு 25 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை அழைத்து பாராட்டு பத்திரம் கொடுத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் :

முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பேசுகையில், "சாதனைகளை பாராட்டும் புரோபஸ் கிளப்பின் தன்மையை பாராட்டுகிறேன். மனிதர்களின் சாதனைகளை கொண்டாடுவதன் மூலமாக ஆக்கப்பூர்வமான சக்தியை உருவாக்குகிறோம். நாமும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களுக்கு சந்தோஷத்தை வழங்கினால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். துடிதுடிப்புடன் இருக்கும் வரை நாம் வயதானவர்களாக ஆவதில்லை' என்றார்.ரஷ்ய கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குனர் ஸ்டானிஸ்லேவ் சிமகோவ் சிறப்புரையாற்றினார். புரோபஸ் கிளப்பின் தலைவர் பாலாம்பாள் வரவேற்றார். செயலர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

Wednesday, October 10, 2007

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும் - கி.வீரமணி

தமிழர் தலைவர் (?) கி.வீரமணி எல்லோரையும் ரொட்டி (பிரட்) சாப்பிடச் சொல்லியுள்ளார். வாரத்தில் சில நாட்கள் அரிசி உணவைத் தவிர்த்து பிரட் சார்ந்த உணவு (சாண்விச், பர்கர் போன்றவை) சாப்பிட்டால் எல்லோரும் நலமாக வாழலாம் என்கிறார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் புரா திட்டத்தை அமுல்படுத்துவது இருக்கட்டும். ஏற்கனவே நாட்டில் கோதுமை தட்டுப்பாடு என வீணாய்ப் போன கோதுமையை இறக்குமதி செய்து பலரும் வாங்கிக் கட்டிகொண்டிருக்கையில் தமிழர்கள் அரிசி உணவைக் குறைத்தால் இன்னும் என்னென்ன நிலைமை வரும் ?

தமிழர்தம் உணவான இட்லிவடைக்கும் சாம்பார் வடைக்கும் இப்படியுமொரு threatஆ :-)

பதியுங்கள் உங்கள் கருத்துகளை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செய்தி / நன்றி : விடுதலை

ரொட்டி உணவும் - கெட்டி வாழ்வும்!

இன்று (அக்டோபர் 8) உலக ரொட்டி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் உள்ள 365 நாள்களும் ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட பொருளை மய்யப்படுத்தி உலக நாள்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது!

பொதுவாக உணவு நாள் என்று அழைக்காமல், ரொட்டியை மய்யப்படுத்தி இப்படி ஒரு நாளா என்று சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

அரிசியையே முக்கிய உண்ணும் உணவுப் பொருளாகக் கருதுபவர்களைவிட உலகில் ரொட்டியை முக்கிய உணவாக (ளுவயயீடந குடிடின) உண்ணும் மக்கள் பல கோடிக் கணக்கில் உள்ளனர்.
ரொட்டியை உணவாகக் கொண்ட பழக்கம் இருந்த காரணத்தால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவர்கள் அவர்தம் கடவுளை வேண்டும் பிரார்த்தனையில்கூட, `இன்றைக்குத் தேவைப்படும் ரொட்டியை எங்களுக்குத் தாரும் பிதாவே என்று ரொட்டியைத்தான் கேட்டார்கள்! (அதிலே கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய செய்தி, ரொட்டியை அன்றாடம் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்; ஒட்டுமொத்தமாக சேமித்து இப்போது குளிர்பதன பெட்டியில் அல்லவா அடைத்து வைத்து) உண்டு, மகிழ்கின்றனர்!

பிரெஞ்சுப் புரட்சி வரலாற்று லூயி மன்னன் மனைவி மேரி அன்டாயினெனட் என்பவர் மக்கள் ரொட்டி கிடைக்கவில்லையே என்று பஞ்சத்தில் வாடியபோது, ``அவர்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்ற பொறுப்பற்ற விசித்திரமான அறிவுரை கூறிய சம்பவங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு!

`கால் வயிற்றுக் கஞ்சி என்பது நம் நாட்டில் நாம் பயன்படுத்தும் சொல்லாட்சி. ஆனால், மேலைநாடுகளில், `ஒரு சிறு ரொட்டித் துண்டுக்கும் வழி இல்லை என்பது அவர்களின் சொல் வழக்கு; காரணம் அவர்களது உணவு ரொட்டிதான்!

இந்த ரொட்டியைத் தயாரிப்பதில்கூட ஒவ்வொரு வகையிலும் புத்தம் புது முறைகளைக் கையாண்டு, விதவிதமாகத் தயாரித்து நுகர்வோரை ஈர்க்கின்றனர்!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் முதல் முறையாக 1980 களில் சென்றபோது, அங்கு பெரிய பேரங்காடிகளில் ரொட்டி வாங்கிச் செல்வோரைக் கண்டு நானும், எனது நண்பர்களும் பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போனோம்! காரணம், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தடி போல் இரண்டு மடங்கு நீளமுள்ள ரொட்டியை வாங்கி லாவகமாகத் தூக்கிச் செல்கின்றனர். நாம் அரிசி வாங்கி சமைப்பதற்கு எடுத்துச் செல்வதுபோல அங்கே அவர்கள் அந்த நீண்ட ரொட்டியை வாங்கிக் கொண்டு சமையல் அறைப் பகுதியில் அப்படி மாட்டிவிட்டு ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப வெட்டியெடுத்து, அதனுடன் உருளைக்கிழங்கை (குசநஉ குசநைள) தட்டு நிறைய வைத்துக்கொண்டு சாப்பிட்டுப் பசியாறுகின்றனர்! (`உருளைக்கிழங்கு வாய்வு என்றெல்லாம் கதை பேசுவது இல்லை!)

நமக்குக்கூட இந்த ரொட்டி உணவு ஒருவேளையாவது எடுத்துக்கொள்ளும் பழக்கம் வந்தால் மிகவும் நல்லது!

சிறுசிறு வகையில் பசி போக்கிட சான்ட்விச் (ளுயனேறஉ) என்பதை இப்போது இரண்டு துண்டு ரொட்டி (ளுடஉந) அதனுள் கோழி இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ அல்லது காய்கறிகள் மட்டும் சாப்பிடுவோர் அந்த சிறு `சான்ட் விச்சுக்குள் தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு இவற்றை இடையில் வைத்து சாப்பிடும் பழக்கம் இப்போது அலுவலகப் பணியாளர்கள், அவசரப் பணியாளர்கள் மத்தியில் அதிகம் பரவிக் கொண்டுள்ளது!

ரொட்டியில் பல வகையில் தயாரித்து, ஒரே வகையில் அனுதினமும் சாப்பிட்டால் அலுத்துப் போகும் என்பதால், `ரொட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பரவசப்பட்டுப் பாடும் வகையில் தயாரிக்கின்றனர்.

சிங்கப்பூரில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து ரொட்டி தயாரிக்கத் தொடங்கி, இன்று அங்கே அவர்களால் தயாரிக்கப்படும் ரொட்டி மிகப்பெரிய வரவேற்புக்கு ஆளாகியுள்ளது!

வல்லத்தில் உள்ள நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெரிதும் கிராமத்துப் பெண்களைக் கொண்டது - இந்த ரொட்டி தயாரிக்கும் தொழிலை நன்கு கற்றுக் கொண்டு, அவரவர் ஊருக்குச் சென்று, வங்கிகளில் கடன் பெற்று ரொட்டி தயாரித்து எளிய விலைக்கு - குறைந்த லாபத்துடன் வருவாயைப் பெற்று வசதியாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம்!

`இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 நாள்களுக்காவது ரொட்டி உணவை உண்போம்; அரிசிக்கு சற்று விடுமுறை அளிப்போம். அதன்மூலம் சர்க்கரை வியாதி ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
இதனால் மகளிருக்குக் கூட இந்த சமையலறைப் பாரம் கொஞ்சம் குறையும் வாய்ப்பு ஏற்படக் கூடும்!


இட்லி தயாரிப்புக்கு எடுக்கும் நேரம், நினைப்பு, உழைப்பு இவற்றைவிட கடையிலிருந்து நல்ல ரொட்டியை வாங்கிக்கொண்டு வந்து கூடி உண்டு மகிழலாமே!
`என்ன தொடங்கலாமா? `நாளைமுதல் என்று சொன்னால் நடைமுறைக்கு வராது; `இன்று முதல் என்று கூறி மாற்றத்தைத் தொடங்கி மகிழுங்கள்.

இல்லத்தரசிகளுக்கு சற்று ஓய்வு தர இதுவும் ஒருவகை உதவியே. அதிலும் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களுக்கு `ரொட்டி பெரிதும் கைகொடுக்குமே

Tuesday, October 9, 2007

முதல்வருக்கு வைகோ பதிலடி

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.

யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில் பெரிய கப்பல்கள் போகும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு சில கேள்விகளை விடுத்து, என் குற்றச்சாட்டை அவர் மறுத்து நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் நான் பேசியதற்கு முதலமைச்சர் கருணாநிதி, என் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் சாமர்த்தியமாக திசை திருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.

என் கேள்வி இதுதான், அண்ணா மறைந்த பின்பு 69 முதல் 98 செப்டம்பர் வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்தப் பிரதமரிடமாவது டெல்லியில் சேதுகால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி நேரடியாகப் பேசி இருக்கிறாரா? 69ல், 71ல், 89ல், 96ல் நான்கு முறை முதல்வரானபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை.
தமிழர்களின் நூற்றாண்டு காலக்கோரிக்கையான அண்ணாவின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.

அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்' என அறிவித்தேன். தமிழக முதல்வர் 7ம் தேதி அன்று விடுத்துள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, "சேதுத் திட்டத்துக்காக கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்' என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார்.

2002, மே 8ம் தேதி, அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தையும், 2002, அக்டோபர் 15ல் எழுதிய கடிதத்தையும் சாட்சிக்கு அழைத்து உள்ளார். இதனால் ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் 1998ல் பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002ல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார்.

ஆனால் அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில் கூட 98ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ல் திமுக நடத்திய அண்ணாபெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில் பிரதமர் வாஜ்பாய் "சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்' என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.

நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. 2004ல் அமைந்தபோது அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும் தயாரித்த போது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செய்தேன். ஆனால் சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கருணாநிதி சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை. இதுகுறித்து மன்மோகன் சிங்கிடம் பேசவும் இல்லை.

ஆனால் அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாகூசாமல் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாய்த் திட்டத்தை வற்புறுத்தியதாக ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி அவ்வாறு மன்மோகன் சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிரூபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதலமைச்சர்
கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில் இதற்குப் பதிலே இல்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில் ஈடு இணையற்ற வல்லவர் கருணாநிதி ஆவார். அதனால்தான் 2002 மே மாதம் 8ந் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் "நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன்' என்று அப்பட்டமான ஐமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.

சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் துளி அளவும் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதால்தான் 2001, பிப்ரவரி 1ம் தேதி, சென்னையில் எண்ணூர் துணைத் துறைமுகத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த விழாவில், பங்கு ஏற்றுப் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி, தனது உரையில் துறைமுகங்களைப் பற்றிப் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி வலியுறுத்தவும் இல்லை. அதுபற்றிக் குறிப்பிடவும் இல்லை.

இத்திட்டம் குறித்துப் பேச வேண்டிய பொருத்தமான இடம் என்பதையும் பிரதமரிடம் வற்புறுத்த வேண்டியது கடமை என்பதையும், திட்டமிட்டே நிராகரித்து விட்டார் என்பது தான் உண்மை. ஆனால் கருணாநிதி தன் கடமையை மறந்தாலும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை அங்கே நினைவுறுத்தத் தவறினாலும், வாஜ்பாய் தன்னுடைய உரையில், "தமிழக மக்களின் நீண்டநாள் கனவாக இருந்துவரும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தோம். அந்த உறுதியை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியும் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். எந்த மதத்தினரின் உள்ளத்தையும் புண்படுத்திப் பேசாமல், கருமமே கண்ணாகச் செயல் ஆற்றுவது தான் இந்த வேளையில் தேவையான அணுகுமுறை ஆகும். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இத்திட்டம் குறித்து மாற்று வழியைப் பரிசீலிப்பதாகச் சொல்லி மூன்று மாத காலம் அவகாசம் பெற்று இருக்கிறது. மாற்று வழி என்ற யோசனையையும் புறக்கணிக்கவில்லை' என்று ஒரு கட்டத்தில் தமிழக முதல்வருக்கு கூறினார்.

அமைக்கப்படுகின்றன சேதுக்கால்வாய் 14 மீட்டர் முதல் 15 மீட்டர் ஆழத்துக்குக் குறையாமல் அமைந்தால் தான் பெரிய கப்பல்கள் அக்கால்வாயில் செல்ல முடியும். ஆனால் தற்போது அமைக்கப்படுகிற சேது சமுத்திரக் கால்வாய் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரைதான் ஆழப்படுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது.

அப்படியானால் 80,000 டன் முதல், ஒரு லட்சம் டன் எடை உள்ள கப்பல்கள், பன்னாட்டுக் கப்பல்கள் இக்கால்வாய் வழியாகச் செல்லவே முடியாது. 30,000 அல்லது அதிகபட்சம் 40,000 டன் எடை உள்ள சிறிய கப்பல்கள் மட்டுமே இக்கால்வாயில் செல்ல முடியும் என்பதால், எந்த நோக்கத்துக்காக சேதுக் கால்வாய்த் திட்டம் அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

மீனவ மக்களின் கவலையையும், ஐயத்தையும் போக்கிடும் வகையில், தகுந்த விளக்கங்களைத் தருவதுடன், பெரிய கப்பல்கள் செல்லுகிற விதத்தில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும்.

Source / Nandri: Maalaisudar

Monday, October 8, 2007

மற்றுமோரு படம் - இப்போ ஸ்டாலின்

தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு.

(((இன்னும் திமுக தலைவர் தான் பாக்கி. ஆக ஸ்டாலினும் தயாராகிவிட்டார்.)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இப்தார் நிகழ்ச்சி ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ""தேர்தல் இப்போது இல்லை என்பதால், இப்தார் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை'' என்று, அமைச்சர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமை வகித்தார்.

அமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கிறீர்கள். சிறப்பு விருந்தினராக நான் வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். சில தலைவர்களுக்கு தேர்தல் வந்தால் தான் இப்தார் நினைவுக்கு வரும். ஓட்டுகளை பெறுவதற்காக இப்தார் நிகழ்ச்சி நடத்துவர். பிரதான எதிர்க்கட்சித் தலைவரே முன்னின்று இப்தார் விருந்து நடத்துவதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் நடக்கவுள்ளது என்றால் அவர் வந்திருப்பார். இப்போது தேர்தல் இல்லை என்று தெரிந்ததும் அவர் வரவில்லை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான், தமிழக அரசின் சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலர் சையது சத்தார், கவிஞர் சல்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி / படம் நன்றி: தினமலர்

ராமதாஸ், கார்த்தி சிதம்பரம்

விஜயகாந்த்

கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி

கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி..

தொடர்புடைய சுட்டிகள் - இங்கே மற்றும் இங்கே


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் பதவி என்றால் எதற்கும் இறங்கி வருவார்கள் - எதுவும் நடக்கும் - இன்னும் 20 மாதங்களுக்கு நல்ல வசூல் இருதரப்பினருக்கும்.

இந்த செய்தி உண்மையா ?
பார்க்க ரீடிஃப்

எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர் ?

எடியூரப்பா முதல்வர், குமாரசாமி துணை முதல்வர்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் பதவி என்றால் எதற்கும் இறங்கி வருவார்கள் - எதுவும் நடக்கும் - இன்னும் 20 மாதங்களுக்கு நல்ல வசூல் இருதரப்பினருக்கும்.

இந்த செய்தி உண்மையா ?
பார்க்க ரீடிஃப்

Wednesday, October 3, 2007

இந்தி மொழி வளர்ச்சி : டி.ஆர்.பாலு பாராட்டு

"இந்தி மொழியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது பாராட்டுக்குரியது' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் போர்ட் பிளேர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாவது:

இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை வளர்ப்பதற்கு உண்டான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளை பாராட்டுகிறேன். எனது அமைச்சகம் சார்ந்த அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து கடிதப் போக்குவரத்துகளுமே இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மூலம் தான் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு இருமுறை இந்தி மொழி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்தி மொழி ஷீல்டு திட்டம் மூலம் இந்தி தெரியாத அதிகாரிகளுக்கும் இந்தி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்காக இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தியை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தி ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இந்த குழுவின் சார்பில் அளிக்கப்படும் ஆலோசனைகள், பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும்படி அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பாலு பேசினார்.

Source / Nandri : Dinamalar