Wednesday, August 12, 2009

நாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து

நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,

பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

மனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.

எங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: