Sunday, May 27, 2007

தினகரனின் தலைப்பு குளறுபடி

"மானத்தை தவறவிட்டு 2 மணிநேரம் துபாயில் வித்த நடிகைகள்" என்ற தலைப்பில் இன்றைய 12ஆம் பக்க செய்தி. என்னவென்று உள்ளே படித்துப் பார்த்தால் செய்தி வேறு.

தலைப்பு "விமானத்தை தவறவிட்டு 12 மணிநேரம் துபாயில் தவித்த நடிகைகள்" என்று இருந்திருக்க வேண்டும். லே-அவுட் ஆர்டிஸ்டின் தவறா அல்லது இதை கவனிக்காமல் அச்சுக்கு அனுப்பிய பொறுப்பாசிரியர் தவறா ?





12 மணி நேரம் துபாயில் தவித்த நடிகைகள் விமானத்தை தவறவிட்டு

சென்னை, மே 28: கலைநிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகைகள் விமானத்தை தவறவிட்டதால் 12 மணிநேரம் தவித்தனர்.

துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்ட நட்சத்திர கலை விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் நடிகர் பரத், நடிகைகள் சந்தியா, சங்கீதா, சமிக்ஷா, தாரிகா, மும்தாஜ், கனிகா, பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகர் கார்த்திக், நடன இயக்குனர் கந்தாஸ் உட்பட 40 கலைஞர்கள் கலந்துகொண்டனர். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிவரை நடந்தது. 18 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை ரசித்தனர்.

நிகழ்ச்சி முடிந்து நேற்றுமுன்தினம் துபாயிலிருந்து சென்னைக்குப் புறப்பட தாரிகா, சமிக்ஷா, சங்கீதா, கனிகா மற்றும் பாடகர், பாடகிகள் விமான நிலையத்துக்கு வந்தனர். பாஸ்போர்ட் சோதனை மற்றும் உடமைகள் சோதனை முடிந்து அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் தாரிகாவும், சமிக்ஷாவும் ஷாப்பிங் செய்யச் சென்றனர். பொருட்களை வாங்குவதில் மும்முரமாக இருந்ததில் விமானத்துக்கு வரவேண்டியதை இருவரும் மறந்துவிட்டனர். நேரமாகிக்கொண்டே இருந்ததால் மைக்கில் இருவரின் பெயரையும் சொல்லி, உடனே விமானத்துக்கு வரும்படி அறிவிக்கப்பட்டது. மதியம் ஒன்றே முக்காலுக்கு புறப்பட வேண்டிய விமானம் அவர்களுக்காக இரண்டே கால் மணிவரை காத்திருந்தது.

அப்போதும் வராததால் இருவரது லக்கேஜையும் இறக்கி வைத்துவிட்டு விமானம் புறப்பட்டது.
ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்த சமிக்ஷா, தாரிகா விமானம் புறப்பட்டுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து தவித்தனர். விமானம் சென்றுவிட்டதால் சுமார் 12 மணி நேரம் அவர்கள் அங்கேயே காத்திருந்து, மறுநாள் விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.

இதுபற்றி சமிக்ஷாவிடம் கேட்டபோது, ‘‘விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் நானும், தாரிகாவும் ஷாப்பிங் போனோம். திரும்பி வந்தபோது விமானம் புறப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அடுத்த விமானத்தில் புறப்பட்டு விடலாம் என்று விமான நிலையத்திலேயே ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தோம். நேரம் செல்லச் செல்ல பயம் வந்துவிட்டது. அங்கும் இங்கும் நடந்து கால்களும் வலிக்கத் தொடங்கியது. சுமார் 12 மணி நேரக் காத்திருப்புக்கு பிறகு மறுநாள் விமானத்தில் சென்னை வந்தோம். வாழ்க்கையில் இது மறக்க முடியாத நிகழ்ச்சி. இனிமேல் ஷாப்பிங்கே செல்லக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்’’ என்றார்.

Nandri: Dinakaran
http://www.dinakaran.co.in/epaperdinakaran/firstpage.aspx

No comments: