Tuesday, October 30, 2007

இப்போ என்ன பண்றாங்க ?

குமுதத்தின் லைட்ஸ் ஆன் சினிமா பகுதியில் மறந்து போன நடிக-நடிகையர் படம் போட்டு தற்போது என்ன செய்து வருகிறார்கள் என கட்டம் கட்டி வெளியிடுகிறார்கள்.

அதுபோல கீழ் காணும் பிரபலங்கள் இப்போ என்ன பண்றாங்க ? யாருக்கானும் தெரிந்தால் பின்னூட்டவும். பிரபலங்கள் லிஸ்டை நீட்டவும் நீட்டலாம்.

1. தயாநிதி மாறன் (தினகரன் அலுவலகம் செல்லுவது தவிர...) - இவரின் சேவை மீண்டும் (தமிழ்)நாட்டுக்குத் தேவை

2. சடகோபன் ரமேஷ் (முன்னாள் தமிழக / இந்திய கிரிக்கெட் வீரர் சினிமாவிலா ?)

3. எழுத்தாளர் சிவசங்கரி (இந்திய மொழிகளில் நாவலாசிரியர்கள் (அல்லது இலக்கியம் ?) பற்றிய ஆய்வுக்குப் பிறகு ?), அதே மாதிரி இந்துமதி, விமலா ரமணி போன்ற முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள்

4. யூகி சேது (டிவியில் பிரபலமான அரட்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, பஞ்ச தந்திரத்திற்குப்
பிறகு)

5. எம்.எஸ்.உதயமூர்த்தி (ஒரு காலத்தில் தன்னம்பிக்கை என்றால் கூப்பிடு இவரை என்ற அளவில் பல கட்டுரைகளும் மேடைப்பேச்சுகளும் வழங்கியவர்)

6. ஆர்.வி.உதயகுமார் (பொன்னுமணி, சின்னக்கவுண்டர், சிங்காரவேலன், எஜமான் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல)

7. பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள், மற்றும் இன்னபிற நிதி நிறுவன தலைவர்கள் - அனுபவ், ஈஸ்வரி பைனான்ஸ் மற்றும் பல 24% வட்டிதருவதாகச் சொன்னவர்கள்

8. கவுண்டமணி (ரொம்ப மிஸ் பண்றோமுங்க)

9. குற்றாலீஸ்வரன் (இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த வீரர்)

10. பூர்ணம் விஸ்வநாதன் (மகாநதிக்குப் பிறகு காணவில்லை)

11. நடிகர் ராமராஜன் (ஒரு காலத்தில் சில்வர் ஜூபிளி நாயகன், பிறகு மக்களவை எம்.பி - சிலகாலம் முன்பு குமுதத்தில் மிகவும் கஷ்டப்படுவதாக ஒரு பேட்டி.. ஆனால் அதன் பின் ?)

12. சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏ.வி.ரமணன் (எப்டி இருந்த நிகழ்ச்சி இப்போ
எப்டி ஆயிடுச்சு)

கிருஷ்ணசாமியை காத்த ராமர்

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமியை ராமர் டாலர் வடிவத்தில் வந்து காப்பாற்றியதாக அவருடன் சென்ற கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவத்தின் போது, கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் அவரது மார்பில் வேல் கம்பியால் குத்தியதாகவும், அவர் அணிந்திருந்த டாலரில் வேல் கம்பு பட்டு அது உடைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

ராமர் டாலரை கிருஷ்ணசாமி அணிந்திருக்காவிடில் வேல் கம்பு இன்னும் ஆழமாக கிருஷ்ணசாமியின் உடலில் பாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் ராமர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் உயிரை ராமர் டாலர் வடிவத்தில் வந்து காப்பாற்றியதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

News Source: Maalaisudar

Monday, October 29, 2007

கொடியும் மஞ்சள் !

இதை Innovation என்று சொல்வதா இல்லை Lateral thinking என்று சொல்வதா ? ஒரு தண்ணி லாரி முன்பு மக்கள் அலைமோதுவதும், அதற்காக பெரிய க்யூவில் நிற்பதும், அதனால் வரும் தள்ளு முள்ளுகளும் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வித தள்ளுமுள்ளுகளை கொஞ்சம் தவிர்க்க நிச்சயம் இந்த 17 பேர் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிக்க உதவும் அமைப்பு உதவும். மேலும் குடத்தை வைக்க சிறிய பிளாட்ஃபார்ம் இருப்பதால் அங்கிருந்து தூக்கி நேரே இடுப்பில் வைக்கவும் இலகுவாக இருக்கும்.

பாராட்ட வேண்டிய டிசைன். இதுதான் இந்தியா / தமிழகம் போன்ற பகுதிகளுக்குத் தேவையான மக்களுக்கு உதவும் Innovation.

செய்தி / படங்கள் நன்றி: தினமலர்








செய்தி / படங்கள் நன்றி: தினமலர்

சென்னை: சத்ய சாய் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் வாகனத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா நதிநீர் திட்டம் கடந்த 1983ம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும், செப்டம்பர் 1996ல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்தது. அப்போது முதல் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை 27.07 டி.எம்.சி., தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.512 கோடியை தமிழக அரசு தன் பங்காக ஆந்திரா அரசுக்கு வழங்கி உள்ளது. மேலும், தமிழகத்தில் நடந்த பணிகளுக்காக ரூ.214 கோடியை செலவு செய்துள்ளது.

கிருஷ்ணா நதிநீர் திட்டப்படி 1996 முதல் கணக்கிட்டால் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் வீதம் 120 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். 27.07 டி.எம்.சி., தான் கிடைத்துள்ளது. இதற்கு காரணம், ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லை வரையிலான 151 கி.மீ., துார கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளால் ஏராளமான தண்ணீர் வீணாகியது தான்.

கண்டலேறு அணையில் துவங்கி தமிழக எல்லை வரையிலான கால்வாய்களில் ஏற்படும் இழப்பை தடுக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து சத்ய சாய் பாபாவை ஈர்த்தது. அதனடிப்படையில் இந்த கால்வாயை பலப்படுத்தும் பணியில் சத்ய சாய் நிறுவனம் இறங்கியது. ரூ.200 கோடி செலவில் 18 மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளால் ஒரு சொட்டு நீர் கூட சேதாரமின்றி தமிழக எல்லைக்கு வந்து சேர காரணமாய் அமைந்தது. இதன்மூலம் சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க நிரந்தர தீர்வாகவும் இது அமைந்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து `ஜீரோ பாயின்ட்' முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரையிலான 25 கி.மீ., துாரம் கால்வாயையும், சத்ய சாய் நிறுவனம் ஏற்றுக் கொண்டு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ச்சியாக போரூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் ஏரிகளின் கரைகளையும் பலப்படுத்தித் தர சத்ய சாய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. சென்னையின் சில மேடான பகுதிகளில், குறிப்பாக குடிசைப் பகுதிகளில், சென்னை குடிநீர் வாரியம், வாகனங்கள் மூலமாக அன்றாடம் குடிநீர் வழங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ஒன்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 850 லாரி நடைகள் மற்றும் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 400 லாரி நடைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு குடிநீர் வழங்குவதற்காக சத்யசாய் பாபா, குடிநீர் வழங்கும் வாகனத்தை குடிசை வாழ் மக்களுக்காக வழங்கி உள்ளார். ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த டேங்கர் வாகனத்தைச் சுற்றி 17 குழாய்கள் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குடங்களை மேடையில் வைத்து குழாய் மூலம் தண்ணீர் பெறலாம். இந்த அமைப்பில் ஒரே நேரத்தில் 17 பேர் துளி நீர் கூட சிந்தாமல், வீணாக்காமல் குடிநீர் பெறலாம்.

தற்போது சென்னை எட்டாவது மண்டலத்தில், 116வது வட்டத்தில் உள்ள சாய் நகர் (பக்ஸ் சாலை) பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியம் தினமும் ஆறு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லாரி நடைகள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. இப்பணியை தற்போது சத்ய சாய் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து குடிநீரை பெற்று ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனம் மூலம் 116வது வார்டு பகுதியில் சாய் நகர் பகுதிக்கு நான்கு நடைகள் இலவசமாக வழங்க உள்ளது. இதனால், சாய் நகர் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 200 குடும்பங்கள் பயன்பெறும். இந்த வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த வாகனத்தில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்தார். நிகழ்ச்சியின் போது, தலைமைச் செயலர் திரிபாதி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தீனபந்து ஆகியோர் உடனிருந்தனர்.சத்ய சாய் அறக்கட்டளையைச் சேர்ந்த சீனிவாசன், ரமணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Friday, October 26, 2007

மகள் தந்தைக்காற்றும் உதவி ?

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஓடிப்போய் திருமணம் செய்த பரபரப்பு ஆங்கில/தெலுங்கு மீடியாக்களில் பரபரக்க, தமிழ் வலைப்பதிவு உலகில் இதன் தாக்கத்தைக் காணோமே ?

ஒரு பெரிய மெகாஸ்டார் என்ற விதத்தைவிட ஒரு தந்தையாக அவர் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பாக வாழ்க்கை அமைக்க ? அல்லது அப்படியே காதல் திருமணம் செய்ய விரும்பினாலும், பெற்றோரின் சம்மதத்தைப் பெறும் வகையில் நடந்து கொஞ்ச காலம் காத்திருந்து அவர்கள் சம்மதத்தையும் பெற்று செய்திருக்கலாமே ?

அப்படியென்ன ஓடிப்போய் திருமணம் செய்து பெற்றோர் பெயரை சந்தி சிரிக்க வைப்பது ?
மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய - 30 வருடங்கள் உழைத்து புகழை ஈட்டிய ஒருவரது நிலையை ஒரே நாளில் சுக்குநூறாக்கி இந்தியா/உலகு முழுவதும் குடும்பத்திற்கு கெட்ட பெயர் விளைவித்து அப்படியென்ன ஒரு காதல் கத்தரிக்காய் !

ஓடிப்போதல் என்னும் இந்த கான்செப்ட் தமிழ் சூழலில் பல்லாண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், இந்த மாதிரி கதைகள் கொண்ட தமிழ் சினிமாக்களை பார்த்து, வெற்றிப்படமாக்கும் தமிழர்கள் - தங்கள் வீட்டில் / சுற்றத்தில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் எப்படிப் பார்க்கின்றனர்.

என்னதான் 21ஆம் நூற்றாண்டு, சமூக மாற்றங்கள் எனப் பேசினாலும், வீடு/சுற்றத்தில் இது போல நடந்தால் எத்தனை பேருக்கு இதனை ஏற்க மனம் வரும். அல்லது பெற்றோருக்கு அடங்க மறுக்கும் பெண்கள் அதிகமாகிவிட்டார்களா ?

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு எமது ஆறுதல்கள். நீரும் உமது குடும்பத்தாரும் மீண்டும் சகஜ நிலைக்கு வர எமது பிரார்த்தனைகள்.

Sunday, October 21, 2007

டில்லியில் ராம்லீலா - சோனியா ஆரத்தி

ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த ராம் லீலா விழா கொண்டாடப்படுகிறது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்




செய்தி / படம்: நன்றி: தினமலர்

புதுடில்லி : தசரா பண்டிகையின் நிறைவு நாளையொட்டி, ராம் லீலா நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தசரா பண்டிகையின் நிறைவு விழா, நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம் லீலாவாக கொண்டாடப்பட்டது. ராவணன் ஒழிக்கப்பட்டதன் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனால், தீமை ஒழிந்து நன்மை பிறக்கும் விழாவாக இதை மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் டில்லி மற்றும் கோல்கட்டாவில் கொண்டாட்டம் "களை' கட்டியது. டில்லி ராம் லீலா மைதானத்தில் இந்நிகழ்ச்சி, நேற்று மாலை வெகு விமரிசையாக துவங்கியது. ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

விதவிதமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ராமரின் வாழ்க்கையை விவரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராம் லீலா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். ராம் லீலா நிகழ்ச்சியை முன்னிட்டு, டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Wednesday, October 17, 2007

ரூ.642 கோடிக்கு நிலம் கைமாறல் - சென்னையில்

நேற்று விருது வாங்கிய ரஜினி இதைக் குறிப்பிட்டுதான் சொன்னாரா என தெரியவில்லை. சென்னையிலேயே (ஏன் தென்னிந்தியாவிலேயே) மிக அதிக விலைக்குப்போன ஒரு ரியல் எஸ்டேட் டீல் பற்றிய செய்தி.

சென்னை போட் க்ளப் / சேமியர்ஸ் சாலையில் இருக்கும் தங்கள் இடத்தை சென்னை ஆர்ச்டையோசீஸ் நிதெஷ் ஷெட்டியின் நிறுவனத்திற்கு ரூ.642 கோடிக்கு விற்றுள்ளனர். (66 வருட லீஸ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ரஜினி சொன்னது"பிள்ளைங்க அடையாறு போட்க்ளப்புல நிலமா வாங்கி தரச்சொன்னாங்க.. தாடிய எடுத்துட்டு மீசைக்கும், தலைக்கும் டை (சாயம்) அடிச்சுட்டு வந்தாத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன்னாங்க"
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரஜினியாலேயே போட் கிளப் பகுதியில் நிலம் வாங்குவது குதிரைக்கொம்பு எனப் படுகையில் நிதேஷ் ஷெட்டி குருப் (இது பெங்களூர் குருப்) வாங்கியுள்ளது என்றால் பின்னணியில் யார் யார் உள்ளனரோ ?

642 கோடி (ரிஜிஸ்ட்ரேஷன் தவிர)என்றால் இன்னும் கட்டிடம் கட்டும் செலவு. இங்கு என்ன வரும்.. வெறென்ன மால் மற்றும் கடை, கண்ணி (கன்னிகளும் தான்), மல்டிப்ளெக்ஸ், காசு கொழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் தான்.

செய்தி / நன்றி: த எகனாமிக் டைம்ஸ் / சென்னை மெட்ரொ ப்ளொக்கர்ஸ்.

Nitesh estates has pipped heavyweights such as Unitech, DLF and HDFC Realty with a Rs 642-crore offer to bag a church property in the heart of Chennai city.

The deal gives the Bangalore-based real estate and construction player — managed by the 31-year-old Nitesh Shetty — access to a nine-acre plot just off the city’s high-profile Boat Club area.

At Rs 642 crore excluding registration, the transaction is the costliest land deal in south India and jostles for a place among the biggest deals nationally. The Chennai archdiocese had put the land parcel on Chamiers Road on a 66-year lease and called bid for the same, with some 30 expressions of interest coming in the initial round itself.

The just-concluded transaction could well be the fifth-largest land deal in India after Adani’s Rs 2,250-crore pact with HDIL, DLF’s Rs 1,675-crore acquisition of DCM Shriram property in Delhi, Unitech’s Rs 1,586-crore purchase in Noida and DLF’s Rs 702-crore acquisition of National Textile Mills’ land in Mumbai. Earlier this year, hospitality major Leela Group purchased a three-acre plot at Chanakyapuri in Delhi for Rs 635 crore.

The Chennai deal follows Citigroup’s $250-million investment into Nitesh Estates, as reported by ET last week. When contacted, a Chennai archdiocese representative declined to comment. Hugh Britto, senior vice-president, business development, at Nitesh Estates offered no comments. The deal size could well be in excess of Rs 700 crore, including registration value.

Sources said realty bigwigs like Sobha Developers and RMZ were in the fray. Unitech had tied up with local player Arihant for the bid. Unconfirmed bids suggested interest from corporate giants like Reliance Retail and ITC. It is believed that Nitesh could look at developing over one million sq ft of mixed use development on plot. The nearly a decade-old Nitesh group is in the midst of an expansion acorss key cities. It is also planning a foray into the hospitality industry and has plans to set up at least five luxury hotels.

Last year, Nitesh inked a definite deal to bring Ritz Carlton to India with the first property in Bangalore. While Nitesh is not the exclusive partner to Ritz Carlton in India, it could well be the preferred party for future expansion, sources said. The Ritz Carlton arrangement as well as an earlier investment by the $26-billion global hedge fund Och-Ziff have catapulted Nitesh into national limelight in recent times. Citigroup’s $250 million infusion was the biggest by the global financial powerhouse in the domestic realty sector.

Monday, October 15, 2007

ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும்

நான் நினைத்தேன். இந்த வார குமுதத்தில் சாவித்திரி கண்ணன் எழுதிவிட்டார்.

என்னைக் கேட்டால் பேசாமல் அதிமுகவினர் விஜய்காந்தை தலைவராக்கிவிடலாம். எம்.ஜி.ஆரின் வழி என்றும் சொல்லிக் கொள்ளலாம். திமுக எதிர்ப்பிலும் வீரியம் இருக்கும். மக்கள் ஆதரவும் இருக்கும். ஞாநி ஏன் இதைப் பற்றி எழுதல ? :-)

செய்தி / நன்றி: குமுதம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஜெ. மறு பரிசீலனைக்குத் தயாராக வேண்டும் - சாவித்திரி கண்ணன்

தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டில் ஒன்று அ.தி.மு.க. இன்று அது பலமான ஒரு எதிர்க்கட்சி. ஆனால் அந்த எதிர்க்கட்சிப் பாத்திரம் இன்று அதனிடமிருந்து பறி போய்விட்டது... என்று எண்ண வேண்டியுள்ளது.

பல நேரங்களில் ஜெயலலிதா எங்கேயிருக்கிறார்? என்ன செய்கிறார்...? தங்களை பாதிக்கும் சில பிரச்னைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பவை மக்களுக்கு அறிந்துகொள்ள முடியாத ரகசியமாக இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் சில இந்து இயக்கங்கள் நீதிமன்றம் சென்றபிறகு அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் அதிரடியாக களத்தில் இறங்கினர். உச்சநீதிமன்றம் சென்று பந்துக்கு தடை பெற்றனர்.

கருணாநிதி பந்த் நடத்தவில்லை என்று பணிவாகப் பின்வாங்கி, உண்ணாவிரதம், பந்த் என இரண்டையும் ஒரு சேர நடத்திவிட்டார். திங்கட்கிழமை நடந்து முடிந்த இந்தச் சம்பவத்திற்கு சனிக்கிழமை விலாவாரியாக அறிக்கை தருகிறார் ஜெயலலிதா.

இத்தனை தாமதம் ஏன்? தமிழகமக்களுக்கு ஜெயலலிதாவிடமிருந்து விடை கிடைக்காத கேள்வி களில் இதுவும் ஒன்று.

இதில் மட்டும் என்றில்லை, இந்த ஆண்டு இந்த ஆட்சியில் மக்கள் சந்தித்த மாநகராட்சிக்கு நடந்த மறுதேர்தல், குளறுபடியான கூட்டுறவு தேர்தல், சேலம் கோட்டம், முல்லைப்பெயரியாறு விவகாரம், பாலாறு பிரச்சினை, தூத்துக்குடி டைட்டானியம் ஆலை பிரச்னை...என எல்லாவற்றிலுமே அவர் மிக காலதாமதமாகவே தமது கருத்துக்களை பிரசவித்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலிலும், கூட்டுறவு தேர்தல்களிலும் அ.தி.மு.க. அங்கத்தினர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது அக்கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி யுள்ளது. இது ஜனநாயக அமைப்பில் சந்திக்க வேண்டிய சவால்களிலிருந்து ஓடி ஒளிவதற்கு ஒப்பாகும்.

இதுவரை தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் கருணாநிதி மீதான அதிருப்தியே ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டமாக கைகொடுத்துள்ளது. ஆனால் இன்று, ‘கருணாநிதியை விட் டால் ஜெயலலிதாதான்’ என்ற நிலைமை அடுத்த தேர்தல் வருவதற்குள்ளாகவே அடியோடு மாறிவிடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தும், சலசலப்பேற்படுத்திக் கொண்டிருக்கும் சரக்குமாரும் மாற்றுக்கட்சிகளையெல்லாம் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ள நிர்பந்தித்துள்ளனர்.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் அணுகுவதற்கு எளிதானவராக இருக்க வேண்டும். அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாலே கூட அவரை அணுகுவது சுலபமில்லை. கூட்டணிகட்சித் தலைவர்களுக்கம் எளிதில் சாத்தியமில்லை.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட போட்டியிட வழியில்லாமல் அ.தி.மு.க.வினரால் தடுக்கப்பட்டனர் விடுதலைச் சிறுத்தைகள். மூன்று நாள் முயற்சி எடுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவியிடம் புகார் செய்யக்கூட வகையின்றி புறக்கணிக்கப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். எனவே திசைமாறி பறந்துவிட்டார். சமீபத்தில் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான அத்வானி, அ.தி.மு.க. தலைவரை சந்தித்துப் பேச ஆசைப்பட்டார். அனுமதி மறுக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் மூன்றாம் அணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த மூன்றாம் அணித்தலைவர்களில் சிலரும் இப்படிப்பட்ட மூக்கறுப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது என பகிரங்கமாக அறிக்கை தந்தனர்.

அறிக்கைகளின் மூலம் மட் டுமே அறியப்படுபவராக ஒரு கட்சித்தலைவர் இருந்தால் அவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளார் என்பதே அர்த்தம்!.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க.வும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதி.மு.க.வும் அழியாமல் தொடர்கிறதென்றால் அதற்கு அவர்கள் கட்சியை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்ததுதான் காரணம். நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி.நடராஜன், சி.பி.சிற்றரசு, அன்பழகன், கருணாநிதி என்ற அடுத்த கட்டத் தலைவர்களைஅண்ணா அரவணைத்து தயார் செய்யா விட்டால் தி.மு.க. என்ற இயக்கம் அவரோடு தீர்ந்துபோயிருக்கும். அதே போல எம்.ஜி.ஆரும் எண்ணற்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை எழுச்சியோடு உருவாக்கினார்.

ஆனால் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கிய ஜெயலலிதா அந்த இயக்கத்தை அடிமைகளின் கூடாரமாக வைத்திருக்கவே ஆசைப்படுகிறார். எம்.ஜி.ஆர். கட்சியையே குடும்பமாக பாவித்தார். ஜெயலலிதாவோ தன் தோழியின் குடும்பத்திற்கே இன்று கட்சியை அர்ப்பணித்துவிட்டார்.

கடந்த இருபதாண்டுகளில் அ.தி.மு.க. இழந்து வந்த தலைவர்கள் மற்றும் தளபதிகளின் பட்டியல் வெகு நீளமானது. அடுத்தடுத்த கட்டங்களாக க.ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், கோவைத் தம்பி, ஆர்.எம்.வீரப்பன், அரங்கநாயகம் போன்ற மூத்தத் தலைவர்கள் ஒதுக்கப்பட்டனர். இப்போதும் பொன்னையன் போன்ற பல திறமையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு தன் செல்வாக்கு மற்றும் திறமையில் மட்டுமே அதீத நம்பிக்கை இருக்கலாம். உண்மையில் அவரது தன்நம்பிக்கைதான் அவருடைய பலம். அதுவே பலவீனமும் கூட! நினைத்ததை பேசும் மனோதிடம் உள்ளவர்தான்! சினிமாவில் வேஷமிட்டவர்தான் எனினும் நிஜத்தில் வேஷத்தை விரும்பாதவர். அவருக்கு எதிரி என்றால் எதிரிதான்! எதிரியிடம் நண்பனாக நடிக்கும் அரசியல் அவரால் முடியாது. இந்து மதத்தில் அவருக்கு மரியாதை உண்டு. கடவுள் நம்பிக்கையையும் எதற்காகவும் ஒளித்துக் கொண்ட தில்லை ஜெயலலிதா. ஆனால் ஒட்டு வங்கிக்காக மதவெறி அரசியலை கையியெலடுக்க விரும்பாதவர். இப்படி சில சிறப்புகள் அவருக்கு இருந்தாலும் வரலாற்றில் எந்த தனிப்பட்ட தலைவர் ஒருவரின் வெற்றிக்கும் அவர் தன்னைச் சார்ந்து வருபவர்களின் உழைப் பையும், திறமைகளையும் சாத்தியப்படுத்திக்கொண்டதே காரணமாயிருந்துள்ளது. ஜெயலலிதா தன்னையும், இயக்கச் செயல்பாடுகளையும் மறுபரிசீலினைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள செல்வாக்கு மக்களின் பரிசீலனைக்கு உட்பட்டே தீரும்..